Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அஜித்துக்கு ஜோடி தமன்னாவா? நயன்தாராவா?

அஜித்தின் அடுத்தபடத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்விக்கே நூறு சதவீத பதில் இன்னும் கிடைத்தபாடில்லை.  நம்பத் தகுந்த வட்டாரங்கள், மீண்டும் வீரம் சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அடுத்து அஜித் ஒரு படம் நடிப்பார் என சொல்கின்றன.

இன்னொரு பக்கம் அஜித் சொன்னதின் பெயரால் விஷ்ணுவர்தன் அஜித்துக்காக அடுத்த படமொன்றை உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் வீரம் சிவா இயக்கும் படத்தில் தமன்னா நடிக்கவிருப்பதாக செய்திகள் சுற்றலில் உள்ளன. ஆனால் தமன்னா நடிப்பாரா என்பது சந்தேகமே. தற்சமயம் மட்டும் தமன்னா கைகளில் ஐந்துக்கும் மேற்பட்ட படங்களை வைத்துக் கொண்டிருக்கிறார்.

விரைவில் துவங்கப்பட உள்ள பாகுபலி, தமிழ் தெலுங்கில் ஒரே சமயத்தில் உருவாகி வரும் தோழா, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தர்மதுரை, தெலுங்கில் ஸ்பீடுநோடு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பதால் அவரிடம் தற்சமயம் கால்ஷீட் இல்லை என்பதே உண்மை.

அதே போல் இந்தப் பாத்திரத்திற்கு அடுத்து கிசுகிசுக்கப்படுபவர் நயன்தாரா. அஜித்துடன் ஜோடியாக நயன் தாரா நடித்து பல வருடங்கள் ஆகின்றன. இடையில் வந்த ஆரம்பம் படத்திலும் நயன்தாராவை ஜோடி போல் சித்தரிக்கவில்லை. ஏகன் படத்தில் தான் இருவரும் ஜோடியாக நடித்தார்கள்.

இப்போது அஜித் ஜோடியாக நயன்தாரா நடித்தால் ரசிகர்களுக்கும் கொண்டாட்டமாகவே இருக்கும் எனலாம்.மேலும் அஜித்துடன் நயன்தாரா நடித்த பில்லா படத்தின் வெற்றி நாமறிந்ததே!

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 
[X] Close