Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மீண்டும் இணையும் சாமி-ஆதி, அடுத்த சர்ச்சை ஆரம்பமா?

சாமி இயக்கத்தில் நடிகர்ஆதி தமிழில் அறிமுகமான படம் மிருகம். ஆதி அறிமுகமாகும் படம் என்பதோடு அதற்கு முன்பாக சாமி இயக்கத்தில் வெளியான உயிர் படம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டதால் இந்தப்படம் எப்படியிருக்குமோ என்கிற பதட்டத்தை ஏற்படுத்தியிருந்தது.

அதோடு படத்தில் நாயகியாக நடித்த பத்மபிரியாவை, படப்பிடிப்பின்போது இயக்குநர் சாமி கன்னத்தில் அறைந்தார். இதனால் பெரும் சர்ச்சைகளில் அடிபட்டார். 2007 ஆம் ஆண்டு இந்தப்படம் வெளியானது. இந்தப்படத்தில் முதல்பாதியில் தீவிர பெண்பித்தராகவும் பிற்பாதியில் அதனால் நோயுற்றவராகவும் ஆதி நடித்திருந்தார். இந்தப்படம் நிறைய எதிர்மறை விமர்சனங்களைச் சந்தித்தது.

அந்தப்படத்துக்குப் பின்னர் ஈரம், அரவான் உட்பட பல படங்களில் நடித்துவிட்டார். கடைசியாக அவர் நடிப்பில் யாகாவாராயினும்நாகாக்க படம் வெளியானது. அது சரியாகப் போகவில்லை. அதேபோல மிருகம் படத்தைத் தெடர்ந்து சிந்துசமவெளி, கங்காரு ஆகிய படங்களை இயக்கினார் சாமி. அப்படங்களும் தோல்வியடைந்தன. இப்போது இயக்குநர் சாமியும் நடிகர் ஆதியும் மீண்டும் இணைந்து ஒரு படம் எடுக்கவுள்ளனராம். அது மிருகம் படத்தின் இரண்டாம்பாகம் போல எடுக்கவும் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

முதல்பாகத்தில் நடித்தவர்களில் பத்மபிரியாவைத் தவிர மற்றவர்களையும் இந்தப்படத்தில் நடிக்கவைக்கவிருப்பதாகத் தெரிகிறது. இயக்குநர் நடிகர் ஆகிய இருவருமே தோல்வி முகத்தில் இருப்பதால் வெற்றிக்காக சர்ச்சைக்குரிய விசயங்களைக் கையிலெடுக்கக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.    

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்