Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நானும் சில பெண்களும்....என்ன சொல்ல வருகிறார் இராதாகிருஷ்ணன் பார்த்திபன்!

கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் உருவாக்கத்தையடுத்து நானும் ரவுடிதான் படத்தில் வில்லனாக ஒரு காட்டுக் காட்டியவர்,  கௌதம்  முதல் கடைக்கோடி தமிழ் சினிமா ரசிகர்கள் வரை பாராட்டுகளைப் பெற்றார்.

இந்நிலையில் அடுத்து தானே இயக்கும் ஒரு படத்தை முழுக்க முழுக்க பெண் பாத்திரங்களை பிரதானமாகக் கொண்டு உருவாக்க இருக்கிறார். இந்தப் படத்தில் பார்த்திபன் நாயகனாகவும், ஐந்து முக்கிய பெண் பாத்திரங்களும் உள்ளனவாம்.

அடுத்த மாதம் முதல் படப்பிடிப்பு துவங்கப்பட உள்ள இப்படத்தில் பெண்கள் தான் பிரதானம். நானும் சில பெண்களும் என்கிற கான்செப்ட் என்று  சொல்லலாம் என்கிறார் பார்த்திபன்.

தலைப்பு இன்னும் வைக்கப்படாத இப்படம் அழகி படம் போல் இருக்கும் எனவும் தான் சந்தித்த சில முக்கியத்துவம் வாய்ந்த பெண்களின் கதை என்றும் சொல்லலாம் என படம் குறித்துக் கூறியுள்ளார் பார்த்திபன்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close