Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனுஷ், ராம் சரண், மகேஷ் பாபு...கலக்கலாக களமிறங்கும் கீர்த்தி சுரேஷ்!

மகேஷ் பாபுவை வைத்து ஏ. ஆர். முருகதாஸ் இயக்கிவரும் புதிய படத்திற்கு கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரம்மோத்சவம் படத்திற்கு பிறகு மகேஷ் பாபு, ஏ ஆர். முருகதாஸ் கூட்டணியில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முறையே தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டு வருகிறது.

இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்புகள் உள்ள நிலையில், படத்தின் கதாநாயகி பற்றி முன்னதாக பல தகவல்கள் வெளியாகியது. தற்போது ரஜினிமுருகன் நாயகி கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் இவர் நடித்த ‘நேனு சைலஜா' திரைப்படம் பெரும் வெற்றியடைய, தெலுங்கு திரை உலகிலும் அதிகம் தேடப்பட்டு வருகிறார் கீர்த்தி சுரேஷ். தமிழில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். தற்போது இவர் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகியுள்ள ரஜினிமுருகன் மாபெரும் வெற்றியடைந்துள்ளதால், கீர்த்திக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளதாம்.

முன்னதாகவே கீர்த்தி மகேஷ் பாபுவுடன் நடிக்க விருப்பம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்புகள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை. அதே போல் ராம்சரண் நடிக்கவிருக்கும் தனிஒருவன் தெலுங்கு ரீமேக்கிலும் நயன்தாரா பாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருக்கிறார். அதே போல் விஜய்யின் அடுத்த படத்திலும் கீர்த்தியின் பெயர் அடிபடுவது குறிப்பிடத்தக்கது. 

-பிரியாவாசு-

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close