Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிரபல நடிகை கல்பனா திடீர் மரணம், திரையுலகம் அதிர்ச்சி!

பிரபல திரைப்பட நடிகையும், நடிகை ஊர்வசியின் சகோதரியுமான கல்பனா திடீர் மாரடைப்பால் ஐதராபாத்தில் திங்கட் கிழமை உயிரிழந்தார்.

தமிழ் மற்றும் தெலுங்கு படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்திற்கு சென்றிருந்தார் கல்பனா. தனியார் ஹோட்டலில் தங்கிருந்தபோது இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

பாக்யராஜூடன் சின்ன வீடு படத்தின் மூலம் தமிழில் பிரபலமானவர் கல்பனா. மேலும் கமல்ஹாசனுடன் சதிலீலாவதி, பம்மல் கே சம்பந்தம் மற்றும் மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்தவர். சின்னவீடு இவருக்கு தமிழில் பெரும் வரவேற்பை பெற்றுத் தந்த படம்.

51 வயதான கல்பனா, நடிகை ஊர்வசியின் சகோதரி ஆவார். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடத்துள்ளார். கடைசியாக மலையாளத்தில் சார்லி என்ற படத்தில் நடித்திருந்தார். அது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  கடைசியாக தமிழில் காக்கிச்சட்டை படத்தில் சிவகார்த்திகேயன் அம்மாவாக கல்பனா நடித்துள்ளார்.

'தனிச்சலா நிஜன்' என்ற மலையாள படத்தில் நடித்த கல்பனாவுக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

படப்பிடிப்பில் கலந்துகொள்ளப் போனவர் திடீரென மரணம் அடைந்ததால் திரையுலகினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
[X] Close