Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரஜினிமுருகன் வசூலைக் குவிப்பது எதனால்? லிங்குசாமி விளக்கம்

ரஜினி ரசிகர்களின் சார்பில் 'மலரட்டும் மனித நேயம்' என்கிற  பெயரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா   வேலூர் மாவட்டம் சோளிங்கரில் நடைபெற்றது.இதற்கான ஏற்பாடுகளை வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர்கள் நற்பணி மன்றம் செய்திருந்தது.

பகல் முழுதும் தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ரசிகர்கள் வந்தவண்ணம் இருந்தனர். மாலையில் விழாவில் சங்கமித்துக் கூடினர். அரசியல் கட்சி மாநாடு போல பிரமாண்ட கட்அவுட் , மாபெரும் மேடை ,பேனர்கள் , ஆயிரக்கணக்கான ரசிகர்கள்  என சோளிங்கரே குலுங்கியது.

மாலையில் விழா தொடங்கியதும் விழாமேடையில் குத்து விளக்கேற்றப்பட்டது. ரஜினி மன்றத்தின் கொடியேற்றப் பட்டது. விழா மேடையில் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் திருவுருவப் படம்  ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் மற்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவரும் 'கபாலி' தயாரிப்பாளருமான கலைப்புலி எஸ். தாணு ஆகியோரால் திறந்து வைக்கப் பட்டது.

மேடையில் தமிழ் நாட்டின் 33 மாவட்ட ரஜினி ரசிகர்கள் நற்பணி மன்றத்தலைவர்களும் பங்கேற்றனர். விழாவில் நடிகர்கள் பாபிசிம்ஹா, கருணாஸ், கருணாகரன், இயக்குநர் லிங்குசாமி, தயாரிப்பாளர் தாணு உட்பட பலர் கலந்துகொண்டடனர்.

இயக்குநர் லிங்குசாமி பேசும் போது  " நான் சின்ன வயதிலிருந்து ரஜினி ரசிகன். அவரைப்போல பேசுவேன்,ஆடுவேன்,பாடுவேன் அப்படிப்பட்ட ஒரு வெறித்தனமான ரஜினி ரசிகன். நினைத்துப் பார்க்கிறேன் இப்போது கூட அவர் மனசு முழுக்க இங்குதான் இருக்கும். எல்லாரும் விழா முடிந்து பாதுகாப்பாக வீடு போய்ச் சேரவேண்டுமே என்றுஅவர் மனசு முழுக்க இங்குதான் இருக்கும். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று சிலர் பேசினார்கள். இதை நாம் சொல்லக் கூடாது. எல்லாம் அவருக்குத் தெரியும்.

நான் 'முரட்டுக்காளை' படத்தை 15 முறை பார்த்தவன். நான் இயக்கும் படத்தில் எந்த கதாநாயகன் நடித்தாலும் அதில் ரஜினிசார் பேசினால் எப்படி இருக்கும் என்று நினைத்துதான் வசனம் எழுதுவேன். 'ரஜினி முருகன்' படத்துக்கு தலைப்புக்கு அனுமதி கேட்ட போது உடனே  விட்டுக்கொடுத்தார். 'ரஜினி முருகன்' என்கிற பெயர் மேஜிக்கால் அது இன்று வசூலைக் குவித்து வருகிறது. " என்றார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.