Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாடர்ன் டே மணிரத்னம்...பிரபல இயக்குநருக்கு எஸ்.ஜே.சூர்யா புகழாரம்!

எஸ்.ஜே.சூர்யா சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் குறித்து கூறியுள்ளார். பீட்சா, ஜிகர்தண்டா  படங்களையடுத்து கார்த்திக் சுப்புராஜ் அடுத்து இறைவி படத்தை இயக்கி வருகிறார்.

சி.வி.குமார் தயாரிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன். இந்தப் படம் குறித்து எஸ்.ஜே,.சூர்யா பேசுகையில், எனது கேரக்டர் குறித்தோ படத்தின் கதை குறித்தோ இப்போது பேசுவது சரியல்ல.

எனது கேரக்டர் குறித்து கார்த்திக் கூறுகையில், அந்தப் பாத்திரத்தை எழுதும் போதே என்னை மனதில் வைத்து தான் எழுதியதாகக் கூறினார், எனக்கு இதுதான் சந்தோஷம், ஒரு இயக்குநர் என்னை மனதில் வைத்து ஒரு கேரக்டரை உருவாக்கியது நடிகராக எனக்கு மகிழ்ச்சி.

கார்த்திக் சுப்புராஜ் என் வாழ்வில் புது நெருப்பை உருவாக்கிவிட்டார், அவரை நான் மாடர்ன் தின மணிரத்னம் என்றே சொல்வேன் என்று பெருமை பொங்கப் பேசுகிறார் எஸ்/ஜே.சூர்யா.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்