Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹாலிவுட்டில் நடிப்பது பற்றி தனுஷ் என்ன நினைக்கிறார்?

வெற்றிமாறனுடன் வடசென்னை, பிரபுசாலமனுடன் ஒரு படம் மற்றும் கொடி உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்துவருகிறார் தனுஷ். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் கலக்கிவந்த தனுஷ் ஹாலிவுட்டிலும் நடிக்கவிருக்கிறார்.

ஈரானிய மற்றும் பிரெஞ்ச் இயக்குநராக மரியன் சத்ராபி இயக்கவிருக்கும் புதிய படத்தில் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.  இப்படத்தில் ஹாலிவுட்டின் பிரபல ஹிட் படமான  “சான் ஆண்ட்ரியாஸ்” படத்தின் நாயகியான அலெக்ஸாண்ட்ரா தத்தாரியோ மற்றும் உமா தர்மன் ஆகியோரும் தனுஷுடன் இணைந்து  நடிக்கவிருக்கிறார்கள்.

பிரபல ப்ரெஞ்ச் நாவலை (The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard) மையப்படுத்தியே இப்படம் உருவாகிவருகிறது. இப்படத்தில் இந்திய மந்திரவாதியாக தனுஷ் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா, பிரான்ஸ், இத்தாலி, மொராக்கோ உள்ளிட்ட நாடுகளில் நடைபெறவிருக்கிறதாம். மேலும் தனுஷின் படப்பிடிப்பு காட்சிகள் ஜூனில் நடைபெறவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 

இந்திய நடிகர்களில் இர்பான் கான், அனில் கபூர், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே, ஓம் பூரி, சோனு சூத் போன்ற நடிகர்களைத் தொடர்ந்து தனுஷும் ஹாலிவுட்டில் அடியெடுத்துவைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய முதல் ஹாலிவுட் படத்தைப் பற்றி தனுஷ் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் பகிர்ந்துகொள்வது, 

"முழு நீள ஹாலிவுட் படத்தில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சியையும் , உற்சாகத்தையும் தந்துள்ளது. நான் இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பது சரியாக இருக்கும் என்பது இயக்குநர் மர்ஜோன் சட்ராபி அவர்களின் கணிப்பு.  இப்படம்  என்னிடமிருந்து வெவ்வேறு விதமான அம்சங்கள்கொண்ட கதாபாத்திரங்களை வெளிக்கொண்டு வரும் ஓர் பயணமாக இருக்கும் என்று நான் நினைக்கிறன்.

எப்போதும் நான் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளுக்கும்  சந்திக்கும் சவால்களுக்கும் எனக்கு உறுதுணையாக இருந்து என்னை உற்சாகப்படுத்தி கொண்டு இருக்கும்  ரசிகர்களுக்கும் , பத்திரிக்கை ,தொலைகாட்சி மற்றும் வலைதள நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த  நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என்று சொல்லியிருக்கிறார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்