Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மணிரத்னம் படத்தில் மலர்டீச்சர்

  ஓகாதல்கண்மணி படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் படத்தில் கார்த்தியும் துல்கரும் நடிப்பதாக முதலில் சொல்லப்பட்டது. அதன்பின்னர் படத்திலிருந்து துல்கர் விலகிக்கொண்டார் கார்த்தியும் நானியும் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது.

துல்கர் இருக்கிறார் கார்த்தியுடைய தேதிகள் ஒத்துவராததால் அவர் படத்தில் இல்லை என்றும் சொல்லப்பட்டது. கடைசியாக துல்கர், நானி ஆகியோர் நாயகர்களாகவும் நித்யாமேனன், ஷயாமி என்கிற புதுமுகம் நாயகியாகவும் நடிப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால் அதுவும் பேச்சளவில் நின்றுவிட்டது. மணிரத்னம் இந்தியில் படம் இயக்கப்போகிறார் என்று சொன்னதும் இல்லையென்றாகிவிட்டது.

மணிரத்னம் படத்தில் கார்த்தி நடிக்கவிருப்பது மட்டும் உறுதி என்று சொன்னார்கள். இப்போது அந்தப்படம் பற்றி இன்னொரு தகவல், படத்தில் நாயகியாக பிரேமம் படத்தில் மலர்டீச்சராக நடித்து ஒரேநேரத்தில் தமிழ் மற்றும் மலையாளரசிகர்களை ஈர்த்த சாய்பல்லவி நடிக்கவிருக்கிறாராம்.

ரசிகர்களின் எண்ணவோட்டத்தைப் புரிந்து அதற்கேறப் நடிகர்களைத் தேர்வு செய்வதிலேயே மணிரத்னத்தின் பாதிவெற்றி இருக்கிறது என்று சொல்லப்படுவதுண்டு. அக்கருத்தை உறுதிப்படுத்தும்விதமாக அடுத்தபடத்துக்கு சாய்பல்லவியைத் தேர்வு செய்திருக்கிறார் மணிரத்னம். இந்தப்படத்தின் படப்பிடிப்பு மே கடைசி அல்லது ஜூன் முதல்வாரம் தொடங்கப்படலாம்.

       
 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close