Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விமலுக்கும் சூரிக்கும் சண்டையா?

 விமலும் சூரியும் பிரபலமாவதற்கு முன்பிருந்தே நண்பர்கள். இருவரும் ஒரேஅறையில் இருந்ததாகவும் சொல்வார்கள். இருவரும் பிரபலமான பின்னரும் அந்த நட்பு தொடர்ந்துகொண்டிருந்தது. இப்போது அந்த நட்பில் அனலடிக்கிறது என்று பேச்சு அடிபடுகிறது. அதனால்தான் அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த மாப்ளசிங்கம் படம் தயாராகிப் பல மாதங்கள் ஆகியும் இன்னும் வெளியாகவில்லை.

அந்தப்படத்தில் சூரி சம்பந்தப்பட்ட காட்சிகளைக் குறைக்கவேண்டும் என்று விமல் சொன்னதாகவும் அதனால் சூரி கோபமடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே பூபதிபாண்டியன் இயக்கத்தில் விமல் நடிக்கும் படத்திலிருந்து சூரி விலகிக்கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது.

இது உண்மைதானா? என்று விசாரித்தால், மொத்தத்தகவலையும் அடியோடு மறுக்கிறார்கள். மாப்ளசிங்கம் படம் நன்றாக வந்திருக்கிறது, சரியான தேதியில் படத்தை வெளியிட்டால் அது முழுமையாக மக்களைச் சென்றடையும் என்பதற்காக அதன் வெளியீட்டுத் தேதி தள்ளிப்போனது. இப்போது பிப்ரவரி 26 அன்று படத்தை வெளியிடத்திட்டமிட்டிருக்கிறோம்.

அந்தப்படத்தின் விளம்பரங்களுக்காக விமல், சூரி ஆகிய இருவருமே ஒன்றாக வந்து கலந்துகொள்வார்கள் என்று படக்குழுவினர் சொல்கிறார்கள். புதுஇயக்குநர் ராஜசேகர் இயக்கியிருக்கும் இந்தப்படத்தில் விமல் ஜோடியாக அஞ்சலி நடித்திருக்கிறார். ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார்.

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close