Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாசர் மகன் படத்திலிருந்து நடிகை வெளியேறியது எதனால்?

நாசர் மகன் பாஷா கதாநாயகனாக நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு சிங்கப்பூரில் நடந்து கொண்டிருக்கிறது. கிருஷ்ணவேணிபஞ்சாலை படஇயக்குநர் தனபால்பத்மநாபன் எழுதி இயக்கும் அந்தப்படத்தில் பாஷாவுக்கு இணையாக முன்றுநாயகிகள் நடிக்கிறார்கள்.

ஐஸ்வர்யாராஜேஷ், சலோனிலுத்ரா மற்றும் ஒரு சிங்கப்பூர் நடிகை ஆகிய மூவர் நடிப்பதாகச் சொல்லப்பட்டது. படப்பிடிப்புக்காகச் சிங்கப்பூர் சென்ற இரண்டாவது நாளே படத்தின் இயக்குநருக்கும் சலோனிலுத்ராவுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுவிட்டதாம். தன்னிடம் சொன்னகதை ஒன்று எடுக்கப்படும் கதை வேறு என்று அவர் குற்றம் சாட்டியதோடு இனிமேல் என்னால் நடிக்கமுடியாது என்று சொல்லிவிட்டு சென்னை திரும்பிவிட்டாராம்.

படக்குழுவினர் தரப்பில், சலோனிக்கு ஒதுக்கப்பட்ட விடுதிஅறை சரியில்லை என்று சொல்லிச் சத்தம் போட்டார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாகவே அவர் படத்திலிருந்து வெளியேறினார் என்று சொல்லப்படுகிறதாம்.

இதனால், ஒரேகட்டமாக மொத்தப்படப்படப்பிடிப்பையும் முடித்துவிட்டுச் சென்னை வந்துவிடலாம் என்று திட்டமிட்டுச் சென்றவர்களுக்கு சலோனியின் நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. ஆனாலும் தளர்ந்துவிடாமல் உடனே அவருக்குப் பதிலாக சுகன்யா என்றொரு சிங்கப்பூர்நடிகையை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருக்கிறார்களாம். 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்