Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா இணையும் படம் ரீமேக்கா?

கெளதம் வாசுதேவ் மேனன்  தயாரிப்பில் செல்வ ராகவன்  இயக்கும் இணையும்  “ நெஞ்சம் மறப்பதில்லை” படத்தின் படப்பிடிப்பு இன்று காலை திருவான்மியூரில் ஒரு பங்களாவில் துவங்கியது. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா , ரெஜினா கசான்றா , நந்திதா ஸ்வேதா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

கதை , திரைக்கதை , வசனம் எழுதி இயக்குகிறார் செல்வராகவன் , ஒளிப்பதிவு அரவிந்த் கிருஷ்ணா , இசை சந்தோஷ் நாராயணன் , இவர் செல்வராகவனுடன் முதன் முறையாக இணைந்துள்ளார். கலை விஜய் ஆதிநாதன் .

பெரிய விளம்பரங்கள் எதுவுமின்றி மிக எளிமையாக  இன்று துவங்கிய படப்பிடிப்பை இடைவிடாமல் தொடர்ந்து மார்ச் இறுதிவரை நடத்தத் திட்டமிட்டுள்ளனராம். அதற்குள் மொத்தப்படப்பிடிபையும் நடத்தி முடித்துவிடுவார்களாம். இயக்குநர் செல்வராகவன் இயக்கிவரும் நெஞ்சம் மறப்பத்தில்லை முற்றிலும் புது பாணியில் உருவாகிவரும் திரைப்படமாகும். இது வேறு எந்த படத்தின் ரீமேக்கும் அல்ல என்று படக்குழுவினர் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்கள். 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..!