Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குழந்தைகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய ஸ்ருதி!

ஸ்ருதிஹாசன் தன்னுடைய பிறந்தநாள் விழாவை இன்று கண்பார்வையற்ற குழந்தைகளுடன் கொண்டாடினார்.

கமல்ஹாசனின் மகளான ஸ்ருதி பாடகியாக அறிமுகமாகி தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம்வருகிறார். இன்று இவரின் பிறந்தநாளையொட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லிட்டில் பிளவர் கண்பார்வையற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டாடினார்.

ஏராளமான குழந்தைகளுடன் கேக் வெட்டி, பின்னர் மதிய உணவும், பரிசுப் பொருட்களும் வழங்கினார். காப்பகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும் ஸ்ருதிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் கூறினர்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்