Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஷால் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்

 பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடித்த கதகளி படம் சர்ச்சைக்கு ஆளாகியிருக்கிறது.  தமிழ்நாடு வண்ணார்பேரவை மாநில பொதுச்செயலாளர் கே.பி.மணிபாபா, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
 
நடிகர் விஷால் நடித்த கதகளி திரைப்படம் பொங்கல் விழாவின் போது வெளியானது. இந்த படத்தில் வண்ணார் சமூகத்தைச் சேர்ந்த மக்களை மட்டுமல்லாமல் மருத்துவர், அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மக்களையும் இழிவுபடுத்தும் வகையில் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த வசனங்கள் வண்ணார், மருத்துவர், அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மக்களை புண்படுத்துவதாகவும், அவமதிப்பதாகவும் உள்ளன.
 
இதன்காரணமாக இந்த சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். திரைப்படங்களில் இதுபோன்ற வசனங்களை அனுமதிப்பது சமூக நீதிக்கு எதிரானது. இந்த வசனங்களை தணிக்கை துறையின் பார்வைக்கு உட்படுத்தி தணிக்கை செய்யவில்லை. எனவே, சர்ச்சைக்குரிய அந்த வசனங்களை நீக்க மத்திய திரைப்பட தணிக்கைக் குழுவிற்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
 
இந்த மனு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு சம்பந்தமாக மத்திய திரைப்பட தணிக்கை தலைமை அதிகாரி பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

இந்நிலையில், படத்தில் அவர்கள் குறிப்பிட்ட வசனங்களை நீக்கிவிட்டதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
நடிகர் விஷால் நடித்த கதகளி என்ற திரைப்படம் பொங்கல் நாளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் சிறுபாண்மை சமுதாயத்தை இழிவுபடுத்தும் வண்ணம் வசனங்கள் அமைந்துள்ளதாகவும் அதை நீக்க வேண்டும் என்றும் கோரி தமிழ்நாடு வண்ணார் பேரவை பொது செயலாளரான கே.பி.மணிபாபா மதுரை ஐகோர்டு கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார் மேலும் பல சிறுபான்மை அமைப்பினரும் விஷாலிடம் நேரடியாகவும் , பிறர்மனம் புண்படும்படியாக உள்ள வசனங்களை நீக்க வேண்டும் என்று வேண்டுகோள்விடுத்தனர்.

அதனை தொடர்ந்து விஷால் தன்னிச்சையாகவே முன்வந்து திரைப்பட தணிக்கை அதிகாரிகளின் ஒப்புதலுடன் கதகளியிலுள்ள வில்லன் விஷாலிடம் பேசும் 2௦ நொடி நீளமுள்ள அந்த காட்சி நேற்று முதல் தியேட்டரில் நீக்கப்பட்டுவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.