Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினி பெயரைக் காப்பாற்றுமா ஜீவா படம்?

ஜீவா, ஹன்சிகா நடிப்பில் உருவாகிவரும் படம் “போக்கிரி ராஜா”." தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்"  படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இப்படத்தை இயக்கிவருகிறார்.

 

இப்படத்திற்கான டீஸர் இன்று வெளியாகவுள்ளது. ஜீவாவின் 25வது படமென்பதால் படம் பற்றியான எதிர்பார்ப்பு அதிகரித்துவருகிறது. மேலும் சிபிராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

பி.டி.செல்வகுமார் தயாரித்துவரும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துவருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து ராம்நாத் இயக்கத்தில் நயன்தாராவுடன் ஜீவா நடித்துவரும் “திருநாள்” படமும் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில்  ரஜினி நடிப்பில் ஹிட் அடித்த போக்கிரி ராஜா என்ற படத்தின் தலைப்பை இப்படத்திற்கு வைத்திருக்கிறார்கள்.  அப்படம் ரஜினி ரசிகர்களால், அந்த நேரத்தில் கொண்டாடப்பட்ட படங்களில் ஒன்று. அந்தப் படத்தின் பெயரை இப்படம் காப்பாற்றுமா?

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 
[X] Close