Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரஜினி பட டைட்டில் சந்திக்கும் சோதனைகள்

ஆர்.எஸ்.இன்போடைன்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் 'கோ-2,' 'கவலை வேண்டாம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து வீரா என்கிற படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தது.

இந்தப்படத்தில் முதலில், பாபிசிம்ஹா கதாநாயகனாக நடிக்கவிருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் அவருடைய தேதிகள் மற்றும் சம்பளத்தில் சிக்கல் ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டது. இதனால் படத்தில் அவர் இல்லை என்றானது. அதன்பின் விஷ்ணுவை அந்தப்படத்தில்  நடிக்க ஒப்பந்தம் செய்தார்கள்.

இதுநடந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் படப்பிடிப்பு தொடங்கவில்லை. என்ன காரணம்? என்று பார்த்தால், விஷ்ணு , இயக்குநர் எழில் படம், சுசீந்திரன் படம் என்று ஏற்கெனவே ஒப்புக்கொண்ட படங்களை முடித்துவிட்டுத்தான் இந்தப்படத்துக்கு வரமுடியும் என்கிற நிலை இருக்கிறதாம்.

இதனால், அவருக்குப் பதிலாக வேறு நடிகரை வைத்துப் படத்தை எடுக்கலாமா? என்கிற யோசனையில் படக்குழு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதுபற்றி படக்குழுவினரிடம் கேட்டால், விஷ்ணுவின் தேதிகள் பற்றி இன்னும் ஒரு தெளிவு கிடைக்கவில்லை என்பதால் படப்பிடிப்பு தாமதமாகிறது, படத்தில் அவர்தான் நடிப்பார் என்று சொல்கிறார்கள்.

ரஜினியின் வெற்றிப்படப் பெயரை வைத்தும் இந்தப்படம் தொடங்கவே இவ்வளவு சோதனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்