Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய்சேதுபதிக்குப் போட்டி விஜய்சேதுபதியா?

விஜய்சேதுபதியின் நடிப்பில் முழுமையாக தயாராகி ஐந்துபடங்கள் காத்திருக்கும் நிலையில் இந்தவருடம் முதலாவதாக நலன்குமாரசாமி இயக்கத்தில் உருவான “காதலும்கடந்துபோகும்” படம் காதலர் தினத்தையொட்டி வருகிற 12ம் தேதி வெளியாகவிருக்கிறது.

 

அதுமட்டுமின்றி விஜய்சேதுபதி, ரம்யா நம்பீசன் நடிப்பில் தயாராகிவரும் படம் “சேதுபதி” திரைப்படமும் வரும் 19ம் தேதி வெளியிட திட்டமிட்டுவருவதாக சொல்லப்படுகிறது. திட்டமிட்டப்படி  வெளியானால் ஒருவார இடைவெளியில் விஜய்சேதுபதியின் இரண்டு படங்கள் வெளியாகும். இவ்வாறு வெளியாவதால் விஜய்சேதுபதியின் காதலும்கடந்துபோகும் படமே சேதுபதி படத்திற்கு போட்டியாக அமையலாம் என்று திரைவட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. ஆக, விஜய்சேதுபதிக்கு விஜய்சேதுபதியே போட்டி!

தவிர, நானும்ரவுடிதான் படத்தின் வெற்றிக்குப் பிறகு இவ்விரு படங்களும் வெளியாகவிருப்பதால் வெற்றிவாய்ப்பும், எதிர்பார்ப்பும் கூடியுள்ளது.

இதுதவிர, விஜய்சேதுபதிக்கு சீனுராமசாமி இயக்கத்தில் “இடம்பொருள்ஏவல்”,ரஞ்சித்ஜெயக்கொடி இயக்கத்தில் “மெல்லிசை”, கார்த்திக்சுப்புராஜ் இயக்கியிருக்கும் “இறைவி” மற்றும் சீனுராமசாமி இயக்கத்தில் “தர்மதுரை” உள்ளிட்டப் படங்களும் வெளியாகவிருக்கிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close