Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை டிராபிக் அவலத்தை வெளிப்படுத்திய ரஜினி

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் கபாலி படத்தின் படப்பிடிப்பிற்காக மலேசியா செல்ல வந்த ரஜினிகாந்த், பாஸ்போர்ட்டை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்ததால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு நேற்று காலை 11.45 மணிக்கு செல்லவிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ரஜினி பயணிக்கவிருந்தார். அதற்காக காலை 9.50 மணிக்கு விமானநிலையம் வந்த ரஜினி சோதனைக்கு சென்ற போது, தனது பாஸ்போர்ட் மற்றும் விசாவை எடுப்பதற்காக பையை திறந்தார். ஆனால் அவரது பாஸ்போர்ட் இல்லை. வீட்டிலேயே வைத்துவிட்டு வந்தது தெரியவந்தது.

உடனே அதிகாரிகள், “ விமானம் புறப்படுவதற்கு இன்னும் நேரமிருக்கிறது, அதற்குள் பாஸ்போர்ட்டை எடுத்துவரச் சொல்லுங்கள்” என்று கூறியிருக்கிறார்கள். தகவலை வீட்டிலிருப்பவர்களுக்கு செல்போனில் தெரிவித்து, காரில் வந்தால் சென்னை டிராஃபிக்கில் நிச்சயம்  தாமதமாகிவிடும் என்று பைக்கில் வரச்சொல்லியிருக்கிறார் ரஜினிகாந்த்.

பாஸ்போர்ட் வந்தவுடன் சோதனைகளை முடித்துக் கொண்டு விமானத்தில் ஏறச் சென்றார். காலை 11.45 மணிக்கு கிளம்ப வேண்டிய அந்த விமானம் அரை மணி நேரம் தாமதமாக 12.15 மணிக்கு கோலாலம்பூர் புறப்பட்டுச் சென்றது.

விமானம் தாமதமாக புறப்பட்டுச் சென்றதற்கு ரஜினி காரணமில்லை என்றும், மலேசியாவிலிருந்து வரும்போதே தாமதமாக வந்ததால், கிளம்பிச் செல்வதற்கும் தாமதமாகிவிட்டது என்று விமான நிலையம் தரப்பில் கூறப்பட்டது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 
[X] Close