Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரேமம் நாயகன் நிவின்பாலிக்கு விஜய் கொடுத்த பரிசு

தெறி படத்தின் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்ட விஜய், சமீபத்தில் சென்னையில் 250 நாட்களுக்கும் மேல் ஓடி சாதனை படைத்துவரும் பிரேமம் படத்தை பார்த்துவிட்டு உடனே பட நாயகன் நிவின்பாலிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து நிவின்பாலி பேஸ்புக்கில், “ விஜய் சார், அவரின் அலுவலகத்திற்கு என்னை அழைத்தது எனக்கு பெரிய ஆச்சரியமாக இருந்தது. பிரேமம் படம் அவருக்கு ரொம்ப பிடித்திருக்கிறது, அந்தப் படத்திற்கான எங்களின் கடின உழைப்பைப் பாராட்டிப் பேசினார். சினிமா பற்றி நாங்கள் கொஞ்ச நேரம் பேசினோம்.
ஒருவரின் பாராட்டு எவ்வளவு விலைகொடுத்தாலும் கிடைக்காத பரிசு. எனக்கு அந்த பரிசை கொடுத்தது மட்டுமல்லாமல் இன்னும் அதிகமாக படம் நடிக்க வேண்டுமென்று ஊக்கமாகவும் பேசினார் ” என்றார் நிவின். 

தவிர, விஜய்க்கு நன்றியையும் தெரிவித்து தெறி படத்திற்காக ஒரு ரசிகனாகக் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்