Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என் படத்துக்கு வரிவிலக்கு தேவை இல்லை - சித்தார்த்தின் துணிச்சல்

நடிகர் சித்தார்த் தயாரித்துள்ள படம் ‘ஜில் ஜங் ஜக்’. குறும்பட இயக்குனர் தீரஜ் வைத்தி எழுதி, இயக்கியிருக்கும் இப்படம் வருகிற 12-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த சித்தார்த்,  படம் குறித்து பேசும்போது,

‘‘இப்படத்திற்கு ‘ஜில் ஜங் ஜக்’ என்று பெயர் வைக்கக் காரணம், இப்படத்தில் வரும் முக்கியமான மூன்று கேரக்டர்களின் பெயர்கள் அது. இந்தப்படத்தில் கதாநாயகி இல்லை,‘கதாநாயகி இல்லாமல் படமா?’ என்றும் நிறைய பேர் கேட்டார்கள். இந்தக் கதைக்கு கதாநாயகி தேவைப்படவில்லை. இந்த கதையில்  ஒரு கதாநாயகி கேரக்டரை திணிப்பதாக இருந்தால் அது இந்த கதைக்கு நான் செய்யும் துரோகமாகத் தான் இருக்கும். கதாநாயகி இல்லாத குறை தெரியாத அளவுக்கு படம் படு ஜாலியாக செல்லும்.
இப்படத்தில் தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத பல புதிய விஷயங்களைக் கையாண்டிருக்கிறோம். புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தியிருக்கிறோம். இது நிச்சயமாக ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும். இயக்குனர் தீரஜ் வைத்தி, ஒளிப்பதிவு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, இசை விஷால் சந்திரசேகர், படத்தொகுப்பு குருட்ஸ் ஸ்னைடர், கலை இயக்கம் சிவசங்கர் என இப்படத்தின் பின்னணியில் பணியாற்றியிருக்கும் அனைவருமே இளைஞர்கள் தாம்.
 
திறமையான இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக இப்படத்தை தயாரித்துள்ளேன் என்றாலும் அதில் ஒரு சுயநலமும் இருக்கிறது. எனக்கான கதையை நானே தேர்வு செய்து தயாரிக்கும்போது எளிதாக இருக்கிறது. அதனால் தொடர்ந்து படங்களை தயாரித்து நடிக்க முடிவு செய்துள்ளேன். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஒரே நேரத்தில் இரண்டு படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளேன்.

‘ஜில் ஜங் ஜக்’ என்பது தமிழ் வார்த்தை கிடையாது என்பதால் இப்படத்திற்கு வரிவிலக்குக் கிடைக்காது என்பது தெரியும். அதனால் வரி விலக்குக்கு விண்ணப்பிக்கவில்லை என்றார் சித்தார்த்.

வரிவிலக்கு வேண்டுமென்பதற்காகக் கடைசி நேரத்தில். பெரிய நடிகர் படங்களின் பெயர்களையே மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் தயாரிப்பாளராக இருந்தாலும் பெயரை மாற்றமாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கிறார்.
 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close