Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அட... ‘தெறி’ நைனிகா எவ்ளோ க்யூட் பார்த்தீங்களா..!?

ட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தெறி’ படம் வரும் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு இரண்டு கேரக்டர்கள் இருப்பதாக அட்லி கூற படத்துக்கு ஏக எதிர்பார்ப்பு. அதில் ‘விஜயகுமார்’ என்ற போலீஸ் கேரக்டரில் வரும் விஜய்யின் ஃபர்ஸ்ட் லுக்கை அட்லி சமீபத்தில் வெளியிட்டார்.  அந்தப் படத்தில் மீனாவின் மகள் நைனிகா அறிமுகமாகிறார். தன் தோழி சங்கவியின் திருமணத்துக்கு மீனா குடும்பத்துடன் வந்திருந்தார். அப்போது அவருடன் செம வாலு சேட்டை செய்து கொண்டிருந்தார் நைனிகா.

‘தெறி’யில் நைனிகா அறிமுகமாவது குறித்து அட்லி கூறுகையில்,

’’ ‘அன்புள்ள ரஜினிகாந்த்ல மீனா மேடம் ரஜினி சார்கூட நடிச்சிருந்தாங்க. ‘தெறி’யில் விஜய் சார் கேரக்டர் எவ்வளவு முக்கியமோ, மகேந்திரன் சார் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியத்துவம் உள்ள குழந்தை கேரக்டர் ஒண்ணும் இருக்கு. ஆரம்பம் முதல் கிளைமேக்ஸ் வரை வரக்கூடிய கேரக்டர். ‘தெய்வத் திருமகள்’ சாரா மாதிரி பெர்ஃபார்மன்ஸ் பண்ண வேண்டிய கேரக்டர். ஆனா, பக்கம் பக்கமா பேசணும். அதுக்காக ஆளைத் தேடினேன். முகத்துல ஒரு இன்னொசன்ஸ் வேணும். கண்கள்ல ஒரு குறும்பு வேணும்... பேச்சுல ஒரு மழலை கலந்த இனிமை இருக்கணும்னு ஏகப்பட்ட கண்டிஷன்ஸ்.

ஆனா, சரியான ஆள் கிடைக்காம அப்செட்ல இருந்தேன். அப்ப என் மனைவி ப்ரியா போன்ல ஒரு குழந்தையின் போட்டோ காட்டி, ‘இந்தக் குழந்தை எப்படி இருக்கும்’னு கேட்டாங்க. பிரகாசமாகிட்டேன். ‘பாப்பா செம க்யூட். கொஞ்சம் மீனா மேடம் மாதிரி இருக்கே’ன்னேன். ‘ஆமாம் அவங்க குழந்தைதான். இது ரெண்டு வருஷத்துக்கு முன்ன எடுத்தது. அதனால இப்ப உங்களுக்கு சரியா இருக்கும்’னாங்க.

மறுநாளே மீனா மேடம்கிட்ட பேசினேன். அவங்களுக்கு பயங்கர ஷாக். ‘ஒரு நாள் கொடுங்க. சின்னப் பொண்ணு. யோசிக்கிறேன். விஜய் சார்கூட’னு கேக்குறீங்க. பிரபு சார், ராதிகா மேடம், மகேந்திரன் சார்னு பெரிய பெரிய ஆட்கள் இருக்காங்க. உங்களைச் சிரமப்படுத்தமா பெர்ஃபார்ம் பண்ணணும்’ன்னாங்க. நான் ஒரே ஒரு வார்த்தைதான் சொன்னேன். ‘மேடம், அன்புள்ள ரஜினிகாந்த்ல நீங்க, இப்ப உங்க பொண்ணு விஜய் சார்கூட’ன்னேன். சிரிச்சாங்க. மறுநாள், ‘உங்க பொண்ணை நான் டெஸ்ட் ஷூட் பண்றேன். அதை நான் யார்கிட்டயும் சொல்லல. அதுவும் உங்க திருப்திக்குத்தான. எனக்கு ஓ,கே’ன்னேன். அவங்களும் பிடிகொடுக்கலை. ஆனா, டெஸ்ட் ஷூட்ல நைனிகா பின்னிட்டாங்க. மீனா மேடம் சரி சொல்லிட்டாங்க. நைனிகாவை வெச்சு 60 நாள் ஷூட் பண்ணியிருக்கேன். அவ நடிக்கும்போது விஜய்ணாதான் டிப்ஸ் கொடுத்துட்டே இருப்பார். கேக்கவா வேணும்... அசத்திட்டா நைனிகா!’’ என்று மலர்கிறார் அட்லி.

- ம.கா.செந்தில்குமார்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

[X] Close