Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜய்சேதுபதி படத்தில் நடித்த அற்புதக்கலைஞன் திடீர் மரணம், இயக்குநர் உருக்கம்

விஜய்சேதுபதி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் மேற்குத் தொடர்ச்சிமலை. லெனின்பாரதி இயக்கியுள்ள இந்தப் படம் முழுமையாகத் தயாராகிவிட்டது. பொருத்தமான தேதியில் வெளியிடுவதற்காகக் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் அந்தப்படத்தில் நடித்த எண்பது வயது நடிகர், இயற்கை எய்தியிருக்கிறார். அதையொட்டி அப்பட இயக்குநர் எழுதியுள்ள உருக்கமான பதிவு..

கோம்பை, பண்ணைப்புரம் பகுதியில் 1980, 1990 களில் கூண்டு வண்டியில் தனது காந்தக் குரலின் மூலம் திரைப்பட விளம்பரம் செய்யும்போது அந்த கூண்டுவண்டியின் பின்னால் அவரின் ரசிகர்களாக ஓடிய பல சிறுவர்களில் நானும் ஒருவன்.. பாவலர் வரதராஜன் குழுவில் இருந்தவர்.. 'M. சுடலை'எனும் அவர் பெயரை 'M.S. லை' என்று மாற்றியவர் பாவலர் வரதராஜன் அவர்கள்..

கோம்பையில் முதல்முதலில் சினிமாவில் சேரவேண்டுமென்று கனவு கண்டவர் அவர்... பல்வேறு காரணங்களால் தடைபட்ட அவரின் சினிமா கனவு அவரின் 80 வயதுக்குமேல் நனவானது... 'மேற்குத் தொடர்ச்சிமலை ' -யில் கணக்குப் பிள்ளை கதாபாத்திரத்தில் அவ்வளவு இயல்பாக நடித்தார்.. பின்ணனி குரல் சேர்ப்பின் போது தன்னை திரையில் கண்டு ஆனந்த கண்ணீர் வடித்து அகமகிழ்ந்தார்...

படம் திரைக்கு வருமுன்னே இன்று (03-02-2016) இரவு அந்த அற்புதக் கலைஞன் காற்றில் கலந்துவிட்டார்... M.S. லை அய்யாவிற்கு மேற்குத் தொடர்ச்சிமலை குழுவினரின் கண்ணீர் அஞ்சலிகளை சுமந்து சென்று கொண்டிருக்கிறேன் கோம்பைக்கு... ஒரு இனம் புரியாத பாரம் மனதை அழுத்துகிறது. வார்த்தைகளாய் அதை இறக்கி வைத்துவிடலாம் என முயன்று...பலிக்கவில்லை ! "ச்ச...இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்திருக்கலாம்" என்கிற எண்ணம் மட்டும் சுழன்று சுழன்று எழும்புகிறது...

ஆற்றாமையில் தவிக்கிறோம்...

M.S.லை அய்யா !

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்