Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனுஷ் நடிக்க வேண்டிய படத்தில் அதர்வா...என்ன சொன்னார் ரஜினி?

சமீபத்தில் அதர்வாவின் கணிதன் திரைப்படம் ரஜினிகாந்துக்குத் திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் படக்குழுவை வெகுவாகப் பாராட்டியுள்ளார். இயக்குநர் சந்தோஷ் இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள படம் கணிதன். கல்விச் சான்றிதழ்களை அடிப்படையாகக் கொண்டு நடக்கும் மோசடிதான் படத்தின் கரு.

நாயகன் அதர்வா, நாயகி  கேத்ரீன் தெரசா ஆகிய இருவரும் ரிப்போர்ட்டர்களாக  நடித்திருக்கும் இப்படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் கணிதன் படம் வெளியானதற்கு பின் அதர்வா மாஸ் ஹீரோக்களின் ரேஸில் இணைவார் எனப் புகழ்ந்துள்ளார்.

படத்தின் கேரக்டர் குறித்து சந்தோஷ், இந்தக் கதையை நான் எழுதும் போது தனுஷை மனதில் வைத்தே எழுதினேன். நான் அவரைச் சந்திக்க நினைத்த வேளையில் அவர் இந்திப் படத்தில் பிசியாக இருந்தார். பின்னர் அதர்வாவிடம் கதை சொன்னேன். இப்போது படம் முடிந்த பிறகு பார்த்தால் தனுஷை விட அதர்வா குறைந்தவரில்லை எனத் தெரிகிறது.

இந்தப் படத்தை முடிந்தவரை செயற்கையான செட்டுகளைத் தவிர்த்துவிட்டு ஒரிஜினலான லொகேஷன்களிலேயே படமாக்கினோம். அதனால் படத்தில் நீங்கள் எதார்த்தமான காட்சிகள் அதிகம் காணலாம் எனவும் கூறியுள்ளார் இயக்குநர்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close