Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பொருள் காணாப் போனா போலீஸ்கிட்ட போகலாம்... போலீஸே காணா போனா...!? - ‘தெறி’யை தெறிக்கவிடும் தல க்ரூப்ஸ்

'தல - தளபதி சண்டை எப்போதான் முடிவுக்கு வரும்?' - உலகின் தீர்க்கப்படாத கேள்விகள்ல இதுவும் ஒண்ணு. அஜித்தின் 'வேதாளம்' வந்தப்போ, 'கண்ணாமூச்சி ரே ரே'வைக் கலாய்த்து காயப்போட்டார்கள் விஜய் ரசிகர்கள். இப்போது அஜித் ரசிகர்களின் ரவுண்ட். விஜய்யின் 'தெறி' டீஸர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதிலிருந்தே காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு, 'டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்' பாடி, முன்னுரை எடுத்துக் கொடுத்திருக்கிறார் விஜய். போதாதா? மீம்ஸ், ஹேஷ்டேக், வீடியோ மீம்ஸ்... என இணையமே ரணகளமாகக் கிடக்கிறது.

* 'ஏம்பா தூங்காம இருக்க? - 'தெறி' டீஸர் வரட்டும்... மீம்ஸ் போட்டுக் கலாய்ப்போம்னு காத்துக்கிட்டு இருக்கோம்!' என மீம்ஸ் போட்டு டீஸர் வெளியாவதற்கு முன்பே பிள்ளையார் சுழி போட்டு உட்கார்ந்திருந்திருக்கிறார்கள் தல ரசிகர்கள்.

* 'தெறி'யில் போலீஸ் கெட்டப்பில் மிரட்டியிருக்கிறார் விஜய். சில நிமிடங்கள் 'தெறி' டீஸர் யூ-டியூபில் காணாமல் போகவே, 'ஏதாச்சும் காணாம போனா போலீஸ்கிட்ட போகலாம். அந்தப் போலீஸ் டீஸரே காணாம போனா, யாருகிட்ட சொல்றது?' என்ற வசனத்தில் விதவிதமான மீம்ஸ்கள் தென்பட்டதைப் பார்க்கும்போது, கண்ணும் கருத்துமாக இருந்திருப்பது புரிகிறது.

* இன்னும் சிலர், டீஸரின் சில காட்சிகளை ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டு 'காப்பியடிக்கப்பட்டவை' என்றும், முறுக்கேறிய விஜய்யின் ஆம்ஸ்ஸை வட்டம் போட்டுக் காட்டி 'ஸ்பெஷல் எஃபெக்டில் உருவானது' என்றும் வேற வெவலில் யோசித்து, ரகரகமாய் கோலம் போட்டிருந்தார்கள்.

* 'தெறிக்கவிடலாமா?' என அஜித் பேசும்போது அதை முடிந்தஅளவுக்கு இறங்கிஅடித்த விஜய் ரசிகர்கள், அஜித் ரசிகர்களுக்குச் சற்றும் சலிக்காமல் சண்டைக்கு நிற்கிறார்கள். 'ஆரம்பத்துல ரவுடிதான் (வேதாளம்) கெத்துனு தோணும். கடைசியிலதான் தெரியும், போலீஸ்தான் (தெறி) கெத்து!' இது 'தெறி'யை விரட்டிக்கொண்டிருக்கும் அஜித் ரசிகர்களுக்கு விஜய் ரசிகர்கள் வைத்துள்ள பன்ச் கேடயம்.

* அஜித்தின் 'தெறிக்கவிடலாமா?' வசனத்தைக் கலாய்த்த விஜய் ரசிகர்களே, இப்போது 'தெறி'க்கவிடலாம் எனப் போஸ்டர்கள் அடித்திருப்பதைப் பார்த்தால், வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை நம்பாமலா இருக்கமுடியும்?

எதுக்கு பாஸ் இவ்வளவு அக்கப்போர்? அஜித் ரவுடியா நடிச்சா, விஜய் போலீஸா நடிப்பார். விஜய் போக்கிரியா நடிச்சா, அஜித் போலீஸா நடிப்பார். அதேமாதிரிதான், 'கண்ணாமூச்சி ரே ரே'னு அஜித் பாடினார். 'டிவிங்குள் டிவிங்குள் லிட்டில் ஸ்டார்'னு விஜய் பாடியிருக்கார். நல்லா இருக்கோ, நல்லா இல்லையோ... எல்லாமே பிஸ்னஸ்தான். அதனால, கண்ணாமூச்சி ரே ரே, டிவிங்குள் டிவிங்குள் மட்டுமல்ல, அஜித்தும், விஜய்யும் 'ரெயின் ரெயின் கோ அவே' கூட பாடலாம்!

- கே.ஜி.மணிகண்டன்

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

[X] Close