Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மிருதன் படத்துக்கும் விக்ரமுக்கும் என்ன சம்பந்தம்?

அரிமாநம்பி இயக்குநர் ஆனந்த்ஷங்கர் இயக்கும் இருமுகன் படத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார் விக்ரம்.

இந்தப்படத்தைத் தொடர்ந்து ஜீவா நடித்த சிங்கம்புலி படத்தைத் தயாரித்த எஸ்எஸ்எப் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். அந்தப்படத்தை விஷாலின் நான்சிகப்புமனிதன், சமர் உள்ளிட்ட படங்களை இயக்கிய திரு இயக்கவிருக்கிறார்.

இவ்விரு படங்களைத் தொடர்ந்து அடுத்து அவர் நடிக்கும் படம் பற்றி ஒரு தகவல் உலவுகிறது. அண்மையில் வெளியான ஈட்டி, விரைவில் வெளியாகவிருக்கும் ஜெயம்ரவியின் மிருதன் ஆகிய படங்களைத் தயாரித்திருக்கும் மைக்கேல்ராயப்பனின் நிறுவனத்தில் அவர் ஒருபடத்தில் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

மைக்கேல்ராயப்பன் தயாரித்திருக்கும் மிருதன் படத்தை ஐங்கரன்நிறுவனம் வெளியிடவிருக்கிறது. ஐங்கரன் நிறுவனத்துக்கு ஒருபடம் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தாராம் விக்ரம். மிருதன் பட வியாபாரம் சம்பந்தமாகப் பேசுகின்ற நேரத்தில் விக்ரம் படத்தைத் தயாரிக்கும் பொறுப்பை மைக்கேல்ராயப்பன் நிறுவனம் ஏற்றுக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. விக்ரமுக்கும் இதில் சம்மதமாம். அப்படத்தை இயக்கும் இயக்குநர் மற்றும் மற்ற விசயங்கள் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்களாம். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்