Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’16 வயதினிலே’வை மிஞ்சுமா விசாரணை..? - வாசக ரசிகர்களின் எதிர்பார்ப்பு!

மாறி வரும் ரசனைக்கேற்ப, தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கும் விகடனின் மற்றொரு புதுமுயற்சி, ‘விகடன் தியேட்டர் first look’.

விகடனின் பலமே, அதன் வெளிப்படைத்தன்மைதான். விகடனின் சினிமா விமர்சனம், மக்களின் பார்வையாகவே இருக்கும். விகடனின் விமர்சனத்திற்கும், மதிப்பெண்களுக்கும் தமிழகத்தில் என்றுமே தனி மதிப்பு உண்டு. 

இந்நிலையில், மக்களோடு திரை விமர்சன உரையாடல் என்பதாக,  'விகடன் தியேட்டர் First Look' என்கிற புதிய முயற்சியில் களமிறங்கியுள்ளது விகடன். முதல் படமாக, ’ரியல் சினிமா’ பாணியில் ரசிகர்களின் ரசனையை வேறு தளத்துக்கு அழைத்துச் செல்லும் வெற்றிமாறனின் ’விசாரணை’ எடுத்துக் கொள்ளப்பட்டது. இணையத்தில் இயங்குபவர்களும், கல்லூரி மாணவ- மாணவியரும் கலந்து கொண்ட இந்த விகடன் தியேட்டர் சந்திப்பு, தனிப்பட்ட ஒருவரின் விமர்சனமாக இல்லாமல், ஒரு உரையாடலாக அமைந்திருந்ததால், வேறுபட்ட பார்வையும், பரந்துபட்ட ரசனையும் கலந்த கலவையாக இருக்கிறது.

குறிப்பாக சில விஷயங்களைச் சொல்லலாம்: வீடியோவில் ஐந்தாவது நிமிடம் பேசும் நண்பர், ’இது நிஜமாகவும் நடந்து கொண்டிருக்கிறது’ எனச் சொல்ல, பின்னர் பேசும் ஒரு வாசகர், ‘இப்பவும் நடக்கிறதா?’ என தெரியவில்லை என சந்தேகம் தெரிவிக்கிறார். இவர்கள் இருவருக்கும் 8:25 நிமிடத்தில் பேசுபவரிடமிருந்து பதில் கிடைக்கிறது. ஒரு விவாதம் கலந்துரையாடலாக அமைவதன் நோக்கமே இதுதான். ஒருவரின் விமர்சனத்துக்கும் சந்தேகத்துக்கும் உடனேயே ஒரு தெளிவு கிடைக்கிறது.

அதே போல ஒரு திரைப்படம் வெறும் காட்சி ரசனைக்காக மட்டும் எடுக்கப்படாமல், பார்வையாளன் ஒன்றிப் பார்க்கும் வண்ணம் நிஜ நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக இருத்தலே அதிகம் பேசப்படும். ’விசாரணை’ படத்தை நிஜ நிகழ்வுகளுடன் ஒப்பிட்டுக் கொள்ள முடிகிறதா என்ற கேள்விகளுக்கு 9:36, 10:40 ஆகிய நிமிடங்களில் பங்கேற்பாளர்கள் குறிப்பிட்ட சம்பவங்கள் ‘உண்மை சுடும்’ ரகம்.

ரசிகர்களை வெறுமனே ஒரு ‘சாதாரண பார்வையாளர்’ என்று குறைத்துச் சொல்ல முடியாது என்பதற்கு 25:47 நிமிடத்தில் ஒரு ரசிகை, கிஷோரின் நடிப்பை எவ்வளவு தூரம் ஒன்றி ரசித்திருக்கிறார் என்று விளக்குவதே சாட்சி. அதேபோல, வாசிப்பு அனுபவமிக்க ஒருவர் திரையில் படம் பார்க்கையில், தாளுக்கும் திரைக்குமான வித்தியாசத்தை (28:24 நிமிடத்தில்) விளக்குவதும் ஆஹா ரகம்.

’ஆனந்த விகடன் விமர்சனத்தில் ‘16 வயதினிலே’ மார்க்தான் இதுவரை அதிகமா இருக்கு. இது அதைத் தாண்டணும்...’ என செல்லமாக மிரட்டும் வாசகர், 16 வயதினிலே விமர்சனம் வந்து 16 வருடங்களுக்குப் பிறகுதான் பிறந்திருப்பார். ஆனாலும், அவருக்கும் அதன் வீரியம் தெரிந்திருக்கிறது. இப்படி ஒவ்வொரு படத்தின் விகடன் மதிப்பெண்ணையெல்லாம் ஞாபகம் வைத்துக் கொண்டு வாசிக்கும் வாசகர்களால்தான் 90வது ஆண்டிலும் புது முயற்சிகளைப் புகுத்துக் கொண்டிருக்கிறது விகடன்.

உங்கள் ஆதரவே என்றும் விகடனின் வரம்! 

நன்றி வாசகர்களே..!

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 
[X] Close