Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதுமுக நடிகரின் படத்துக்கு அனிருத் இசையமைப்பது எதனால்?

 அறிமுக இயக்குனர் சாய் பரத் இயக்கத்தில் தயாராகும் புதிய படம் ரம்.  இந்தப்படத்தில்,‘வேலையில்லா பட்டதாரி’ யில் தனுஷின் தம்பியாக நடித்த ரிஷிகேஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.கதாநாயகிகளாக சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ் நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் விவேக் நடிக்கிறார்.

இந்தப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். அவர் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனதிலிருந்து இன்று வரை புதுமுகநாயகன் படத்துக்கு இசையமைத்ததில்லை. இந்தப்படத்தில் முதன்முறை தன் உறவினருக்காக இந்தப்படத்தில் இசையமைக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்தப்பட நாயகன் ரிஷிகேஷ் அனிருத்தின் கஸின்பிரதர்  என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்தப்படத்தில் ‘சித்திரம் பேசுதடி’ ‘அஞ்சாதே’ ‘கத்துக்குட்டி’ என மாறுபட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நரேன் முதன் முறையாக மாறுப்பட்ட முற்றிலும் சவால் நிறைந்த  கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கவுள்ளார்.  மிஷ்கின் இயக்கத்தில் அறிமுகமான நரேன், அவருடைய படங்களைத் தாண்டி வேறு படங்களில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இந்தப்படமாவது அவருக்குப் பலமாக அமையுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close