Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிப்ரவரியில் ரெண்டு, சந்தோஷத்தில் இமான்

ஜெயம்ரவி நடிப்பில்  “மிருதன்” மற்றும் ஜீவா நடிப்பில் “போக்கிரி ராஜா” இரண்டுமே அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகவிருக்கும் படங்கள்.

தமிழ் சினிமாவில் உருவாகும் முதல் ஷோம்பி கதையே மிருதன். ஜெயம்ரவியுடன் லட்சுமி மேனன் நடித்திருக்கும் இப்படத்தை சக்தி செளந்தராஜன் இயக்கிவருகிறார். இப்படத்தை பார்த்த சென்சார் குழு படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இப்படத்தின் மொத்த நீளம் 1:48 மணிநேரம் என்று படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்ந்து, ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் ஜீவா நடித்து வெளியாகவிருக்கும் படம் “போக்கிரி ராஜா”.நாயகியாக ஹன்சிகாவும், வில்லனாக சிபிராஜ் நடித்திருக்கிறார்கள். ஜீவாவின் 25வது படமென்பதால் டீஸர் வெளியானபோதே நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தின் இசை வரும் 14ம் தேதியும், தொடர்ந்து 26ம் தேதி திரைப்படம் வெளியாகவிருக்கிறது.

மேற்கண்ட இவ்விரு படங்களுக்கும் டி.இமான் தான் இசையமைத்திருக்கிறார். அடுத்தடுத்த வாரங்களில் இமான் இசையில் படங்கள் தொடர்ந்து வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close