Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விக்ரம் சொன்னால் மறுக்கமுடியுமா?

எஸ் எஸ் எஃப்  பட நிறுவனம் ஏற்கனவே ஜீவா இரட்டை வேடங்களில் நடித்த “ சிங்கம்புலி “ படத்தை தயாரித்துள்ளது. அடுத்து விக்ரம் நடிக்கும் படத்தையும் தயாரிக்கிறது .இந்தப் படத்தை திரு இயக்குகிறார். இவர் விஷால் நடித்த “ நான் சிகப்பு மனிதன், சமர், தீராத விளையாட்டு பிள்ளை போன்ற படங்களை இயக்கியவர்.

விக்ரம் இப்போது ஆனந்த்சங்கர் இயக்கத்தில் உருவாகும் இருமுகன் படப்பிடிப்பில் இருக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் திரு படத்தில் நடிக்கத் தேதிகள் தருவார் என்று சொல்லப்படுகிறது. அநேகமாக ஏப்ரல் கடைசி அல்லது மே தொடக்கத்தில் அந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இந்தப்படத்துக்கு இசையமைப்பாளர் யார் என்ற பேச்சு வந்தபோது, விக்ரம் இயக்கிய தி ஸ்பிரிட் ஆஃப் சென்னை பாடலுக்கு இசையமைத்த கிரிநாத் படத்துக்கும் இசையமைக்கட்டும் என்று பரிந்துரைத்தாராம். கதாநாயகனே சொல்லிவிட்ட பிறகு மறுக்கமுடியுமா? அவர்தான் படத்துக்கு இசையமைக்கவிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.