Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிம்பு தவறவிட்டார் ஜெயம்ரவி செய்துவிட்டார்

தமிழ்த்திரையுலகில் இதுவரை இல்லாத மாதிரி அல்லது முதன்முறையாக என்று சொல்லுகிற முயற்சி அவ்வப்போது நடக்கும். அதுபோலத்தான் இப்போது சக்திசௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம்ரவி லட்சுமிமேனன் நடித்திருக்கும் மிருதன் படத்திலும் நாயகனின் வேடம் இதுவரை வராதது என்கிறார் இயக்குநர்.

இந்தப்படத்தில் போக்குவரத்துக்காவலராக நடிக்கிறார் ஜெயம்ரவி. இதுவரை நமது கதாநாயகர்கள், சட்டம்ஒழுங்கு காவல்அதிகாரி, துப்பறியும் அதிகாரி, சிபிஐ அதிகாரி எனப் பல்வேறு வேடங்களை ஏற்றிருக்கிறார்கள். ஆனால் போக்குவரத்துக் காவலராக நடித்ததில்லையாம். இந்த முதன்முறை பெருமையை சில மாதங்கள் முன்னால் தவறவிட்டிருக்கிறார் சிம்பு.

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் தயாரான கான் படத்தில் சிம்புவுக்கு போக்குவரத்துக்காவலர் வேடம்தான். அந்தப்படத்தைப் பாதியில் நிறுத்தியதால் முதன்முறையாக போக்குவரத்துக் காவலர் வேடத்தில் நடித்தவர் என்கிற இடத்தை ஜெயம்ரவி பிடித்துவிட்டார்.

இந்தவேடத்தில் நடித்தால் படத்துக்கு ஆபத்து என்கிற செண்டிமெண்ட் இருக்கிறதோ என்னவோ? அந்தப்படம் பாதியில் நின்றது இந்தப்படத்துக்கு தணிக்கையில் ஏ சான்றிதழ். இதனால் பிப்ரவரி 19 அன்று வெளியாகவிருக்கும் இந்தப்படத்தில் வசூலில் முப்பதுவிழுக்காடு வரி செலுத்தியாக வேண்டும்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
[X] Close