Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நயன்தாரா என்ன செய்கிறார்?

 நயன்தாராவைச் சுற்றி நிறைய சர்ச்சைகள். ஆனந்த்ஷங்கர் இயக்கத்தில் விக்ரமுடன் அவர் நடிக்கும் இருமுகன் படப்பிடிப்புக்காக மலேசியா போன நேரத்தில், விமானநிலையத்தில் போதைப் பொருள் வைத்திருந்ததாக மாட்டிக்கொண்டார் என்று செய்திகள் பரவின.

அதைத் தொடர்ந்து இருமுகன் படக்குழுவினர் சார்பில், நடந்தது என்ன? என்கிற விளக்கம் சொல்லப்பட்டது. தன்னைப் பற்றி இப்படிப்பட்ட செய்திகள் வந்தபோதும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தன்னுடைய வேலையில் மட்டுமே கவனமாக இருக்கிறாராம் நயன்தாரா.

இருமுகன் படப்பிடிப்பு முடிந்து சென்னை வந்தவுடனே கார்த்தியுடன் அவர் நடிக்கும் கஷ்மோரா படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டாராம். அந்தப்படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் தொடரவிருக்கிறதாம். அதன்பின் இயக்குநர் சற்குணம் தயாரிப்பில் புதுமுகஇயக்குநரின் படத்தில் அவர் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இதற்கிடையே பிப்ரவரி 12 அன்று மலையாளத்தில் மம்முட்டியுடன் அவர் நடித்த புதியநியமம் படம் வெளியாகவிருக்கிறது. அதைத் தொடர்ந்து சிம்புவுடன் நடித்த இதுநம்மஆளு, ஜீவாவுடன் நடித்த திருநாள் ஆகிய இருபடங்கள் தயாராகிவிட்டன.   

 
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..!