Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனுஷ் படத்திலிருந்து ஷாம்லி நீக்கம்?

எதிர்நீச்சல், காக்கிச்சட்டை ஆகிய படங்களைத் தொடர்ந்து துரை.செந்தில்குமார் இயக்கும் கொடி படத்தில் முதன்முறையாக இரட்டைவேடமேற்றிருக்கிறார் தனுஷ். இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி முதல்வாரத்திலிருந்து பொள்ளாச்சி பகுதிகளில் நடந்துகொண்டிருக்கிறது.

இந்தப்படத்தில் இரண்டு தனுஷ் என்பதால் நாயகிகளும் இருவர். ஒரு தனுஷூக்கு த்ரிஷாவும் இன்னொரு தனுஷூக்கு அஜித்தின் மைத்துனி ஷாம்லியும் நடிக்கவிருந்தார்கள். த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்ட செய்திகள் வெளியில் வந்தது.

ஷாம்லி பற்றி எந்தத் தகவலும் இல்லை. என்னவென்று பார்த்தால், படத்தில் ஷாம்லி இல்லை என்று சொல்லப்படுகிறது. படக்குழுவினர் அவரை நீக்கிவிட்டார்களா? அவரே படத்திலிருந்து விலகிக்கொண்டாரா? என்பது தெரியவில்லை படத்தில் அவர் இல்லை என்பது மட்டும் உறுதி என்கிறார்கள்.

தவிர, அவருக்குப் பதிலாக பிரேமம் மற்றும் விஜயசேதுபதியின் காதலும்கடந்துபோகும் ஆகிய படங்களில் நடித்திருக்கும் மடானோசெபாஸ்டின் நடிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close