Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜய் படத்துக்குள் கீர்த்திசுரேஷ் வந்தது எப்படி?

 'தெறி' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதால், விஜய்யின் அடுத்த பட வேலைகள் வேகம் பிடித்திருக்கின்றன. அவருடைய அடுத்த படத்தை, 'கில்லி', 'வீரம்' ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியிருப்பதோடு  விஜய் நடிப்பில் 'அழகிய தமிழ் மகன்' படத்தையும் இயக்கிய பரதன் இயக்கவிருக்கிறார். 

இப்படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், படத்தொகுப்பாளர் பிரவீன், நகைச்சுவை நடிகர் சதீஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.இப்படத்தில் நாயகியாக நடிக்க காஜல் அகர்வால் உள்ளிட்ட சில முன்னணி  நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். 

 
காஜல் அகர்வால் போன்ற முன்னணி நடிகைகளிடம் போட்டி போட்டு இந்தப்படத்துக்குள் கீர்த்திசுரேஷ் வந்ததெப்படி என்று படக்குழுவினரிடம் கேட்டால்,  இந்தப்படத்தின் நாயகி பற்றிய பேச்சு வந்தவுடனே , இதுவரை விஜய்யுடன் நடிக்காத நடிகை இருந்தால் புதிதாக இருக்கும் என்று பேசினார்களாம். விஜய்யும் அதை ஒப்புக்கொண்டாராம்.
 
இந்த நேரத்தில் ரஜினிமுருகன் படத்தின் வெற்றி மற்றும் அந்தப்படத்தில் கீர்த்திக்குக் கிடைத்த வரவேற்பு ஆகியனவற்றைப் பார்த்து இந்தப்படத்தில் நடிக்கக் கேட்டு அணுகினார்களாம். அவரும் உடனே ஒப்புக்கொண்டாராம்.  மே மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம்.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.