Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வேதாளம் படத்தை ரீமேக் செய்வதில் திடீர் சிக்கல்?

அஜித் நடித்த 'வேதாளம்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது.
 
ஒரு மொழியில் வெற்றி பெறுகிற திரைப்படம் இன்னொரு மொழியில் திரும்ப எடுக்கப்படம். அந்த வகையில் 'வேதாளம்' திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளதாகவும், அதில் பிரபல தெலுங்கு நடிகர் பவன்கல்யாண் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் இருக்கின்றன.

அதோடு நில்லாமல் 'வேதாளம்' திரைப்படம் கன்னடத்திலும் ரீமேக் ஆகவுள்ளதாக  செய்தி வெளியாகியுள்ளது. கன்னடத்தில் அஜித் நடித்த வேடத்தில் புனித் ராஜ்குமார் நடிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
 
தமிழில் வேதாளம் படத்தைத் தயாரித்த ஏ.எம்.ரத்னமே, தெலுங்கு மற்றும் கன்னடப் படத்தையும்   தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. ஸ்ருதிஹாசன் மற்றும் லட்சுமிமேனன் வேடத்தில் நடிக்க நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், இதன்பின்னர் இந்த இரண்டு படங்களின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் தகவல்கள் வந்தன. அதில் ஒரு சிக்கல் ஏற்பட்டிருப்பதாக இப்போது சொல்லப்படுகிறது.

ஒரு படத்தை இன்னொரு மொழிக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்றால், அப்படத்தின் தயாரிப்பாளர் மட்டுமின்றி கதையை எழுதியவரும் அதற்குச் சம்மதிக்கவேண்டும். இப்படங்களை மொழிமாற்றம் செய்ய இயக்குநர் சிவா சம்மதம் தெரிவிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம், வேதாளம் படத்தை இயக்கியதற்காகவே சிவாவுக்கு சம்பளப்பாக்கி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதோடு மொழிமாற்ரு உரிமைக்கான தொகையையும் சேர்த்துக் கொடுத்தால்தான் சம்மதம் தருவார் என்று சொல்லப்படுகிறது. இதனால் வேதாளம் ரீமேக் தாமதமாவதாகச் சொல்லப்படுகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

சிவாஜி குறித்து எம்.ஜி.ஆரின் சிலாகிப்பு! #HBDSivaji #NadigarThilagam
placeholder

ல பெண்களைக் கெடுத்துப் பொய் சொல்லும் பாத்திரம் அது. ஆனால், ஒவ்வொரு கட்டத்திலும் மக்களைத் தன்பால் இழுக்கு மளவுக்கு, ‘ஆங்கிலப் பாணி’ என்று உயர்த்திச் சொல்லப்படும் தகுதியோடு நடித்துப் புகழ்பெற்றார். இன்று, வேறு கோணங்களில் நின்று பார்ப்பவர்கள் சிலர், “ஆங்கிலப் படங்களைப் பார்த்து, அந்தப் பாத்திரங்களைப் போலவே, அந்தப் பாணியிலேயே நடிக்கிறார்’ என்று கூறுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் (‘திரும்பிப் பார்’ படமெடுத்த காலத்தில்) சிவாஜி அவர்கள் அதிக ஆங்கிலப் படங்களை எப்படிப் பார்த்திருக்க முடியும்? இப்போது ஆங்கிலப் படங்களில் நடிக்கும் நடிகர்கள் அப்போது எங்கே இருந்தார்கள்? இப்போது வருகிற படங்களைப் போல் அப்போது வருவதுண்டா? ஏற்று நடிக்கும் பாத்திரங்களுக்கு அவர் அற்புதமான மெருகேற்றி ஒப்புயர்வற்று நடிக்கும் போது, அந்த நடிப்புக்குப் பிறப்பிடமான பயிற்சியையும், தேர்ச்சியையுமல்லவா நாம் போற்ற வேண்டும்.

உங்க ஏரியா எப்படி இருக்கு? உள்ளாட்சி சர்வே முடிவுகள்..!