Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜய் துவண்டபோது கை கொடுத்த நடிகர்- எஸ்.ஏ.சி சொல்லும் புதிய தகவல்

விஜய் நடிப்பில் உருவான புலி படத்தை தயாரித்த செல்வகுமார் தயாரிப்பில் உருவாகிவரும் படம் போக்கிரி ராஜா. ஜீவா, ஹன்சிகா, சிபிராஜ் நடிப்பில் உருவாகிவரும் இப்படத்தின் விழாவில் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்துகொண்டார்.

அவர் பேசும்போது, “ தயாரிப்பாளர் செல்வகுமாரின்ஒவ்வொரு முன்னேற்றத்தையும் கவனித்து வருகிறேன். நானும் விஜய்யும் வளரக் காரணமாக இருந்திருக்கிறார். எங்கள் வளர்ச்சியில் அவருக்குப் பெரும்பங்கு உண்டு.

என் கூட இருப்பவர்கள் உயர வேண்டும் என்று நினைப்பவன் நான். என் கூட இருப்பவர்கள் மேலே, வந்தால் மகிழ்ச்சி.இங்கே வந்திருக்கும் டி.ராஜேந்தர் போராட்டக் குணம் உள்ளவர். நானும் அப்படித்தான்.

'புலி' படத்தின் போதும் சிரமங்கள் வந்தது. அந்த நேரத்தில் ஜீவா ஆறுதலாக இருந்தார். வெற்றி வரும் போது எல்லாரும் வருவார்கள். துவண்டு இருக்கும் போது தூக்கி விடுபவன் கடவுளுக்கு சமமானவன். அப்படி வந்த ஜீவாவுக்கு நன்றி. ஜீவாவின் நல்ல மனசுக்கு இந்தப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும். உங்களிடம் ஃபயர் இருக்கிறது. உழைத்தால் உயரலாம். நான் படிக்காதவன்தான். ஆனால் உழைப்பேன். இன்று வருகிற இளம் இயக்குநர்களைக் கண்டு மலைத்துப் போகிறேன். புது கோணத்தில் சிந்திக்கிறார்கள். இந்த இளைஞர்களோடு நானும் ஓட வேண்டும். என்னை உதவியாளர்களாக வைத்துக் கொள்ளுங்கள். " என்று கூறி வாழ்த்தினார் .

தொடர்ந்து, தயாரிப்பாளர்  பி.டி.செல்வகுமார் பேசும் போது" ஒரு படம் எடுக்க, சொன்னபடி எடுக்கும் இயக்குநர் முக்கியம். கதாநாயகன் முக்கியம். எனக்கு இரண்டும் சரியாக அமைந்தது.என்னை விஜய் தயாரிப்பாளர் ஆக்கினார். சோர்ந்திருந்த போது தூக்கிவிட்டவர் ஜீவா.

புலி படத்தின் போது பிரச்சினை வந்தது.  அப்போது 2 கோடி ரூபாய்க்கு பத்திரத்தைக் கொடுத்து படம் எடுங்க என்றார் ஜீவா.. நான் கண்கலங்கி விட்டேன். இப்படிக் கூட ஹீரோக்கள் இருப்பார்களா? என்று ஆச்சரியப் பட்டேன். 'புலி' வெளிவரும் முதல்நாள் எங்களை கைது செய்து விட்டார்கள். அடுத்த நாள்  படம் வெளியாகுமா எனத் தெரியாது. அப்போது டி.ஆர். வந்து போராடினார். 'புலி' திரைக்குவரக் காரணம் நண்பர் டி.ஆர் தான்" என்றார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.