Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிம்புவுக்குப் பதிலாக ஜி.வி.பிரகாஷ்?

ஜி.வி.பிரகாஷ் நடித்த “த்ரிஷா இல்லன்னா நயன்தாரா” படத்தை இயக்கிய ஆதிக்ரவிச்சந்திரன், சிம்புவுக்கு ஒரு கதை சொன்னார். அந்தக்கதை பிடித்ததால் அவருடைய இயக்கத்தில் நடிக்க சிம்பு ஒப்புக்கொண்டிருந்தார் என்று சொல்லப்பட்டது.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும், சிம்புவிடம் கதை சொல்லியிருக்கிறேன் அவருக்குப் பிடித்திருக்கிறது அடுத்தபடம் அவருடைய படம்தான் என்று சொல்லியிருந்தார். இப்போது அதில் அதிரடி மாற்றம் நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

என்ன காரணத்தாலோ இந்தப்படத்தில் நடிப்பதிலிருந்து சிம்பு பின்வாங்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சியான இயக்குநர் ஆதிக், இந்தக்கதையை ஜி.வி.பிரகாஷிடம் சொல்லியிருக்கிறார். அவருக்கும் இந்தக்கதை பிடித்திருக்கிறதாம். அதனால் அவரே அந்தக்கதையில் நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டாராம்.

ஜி.விக்கு இப்போது “புருஸ்லி”, “எனக்கு இன்னொரு பேர் இருக்கு”, “கெட்டபையன்டா இந்த கார்த்தி” மற்றும் “கடவுள்இருக்கான்குமாரு” ஆகிய நான்கு படங்கள் இருக்கின்றன. இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக முடித்துவிட்டு இந்தப்படத்தில் நடிக்கப் போகிறாரா அல்லது இவை நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் கிடைக்கும் இடைவெளிகளில் ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் நடிப்பதா என்பது பற்றிப் பேசிக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

இப்போதைக்குசிம்பு அந்தப்படத்தில் இல்லை என்பதும் அவருக்குப் பதிலாக ஜிவி நடிக்கிறார் என்பது மட்டும் உறுதி என்கிறார்கள்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close