Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அஜீத்தை முந்தினார் விஜய்

 தமிழ்ப்படங்களில் இதுவரை முன்னணியில் இருக்கும் டீசர் என்றால் அது ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ படத்தின் டீசர்தான். ஒருகோடியே பதிமூன்றுஇலட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்திருக்கின்றனர்.

அதற்கடுத்து அஜித் நடித்த வேதாளம் படத்தின் டீசர் இருந்தது. அதை இதுவரை அறுபத்துமூன்று இலட்சத்துக்கு ஐம்பத்துநான்காயிரம் பேர் பார்த்திருக்கின்றனர். அஜித் படத்தின் இந்தச்சாதனையை விஜய் படம் முறியடித்திருக்கிறது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் டீசர், பிப்ரவரி நான்காம்தேதி வெளியானது. எட்டுநாட்களில் அந்த டீசரை அறுபத்தேழு இலட்சத்து அறுபத்துஆறாயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். எட்டுநாட்களில் இந்தப்படத்தின் டீசர் இவ்வளவு பார்வையாளர்களைக் கொண்டிருக்கிறது. இது இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பும் இருக்கிறது.

ஐ படத்தைப் பொறுத்தவரை இதுவரை இல்லாத பொருட்செலவு மற்றும் ஷங்கரின் இயக்கம் விக்ரமின் அபாரஉழைப்பு எனப்பல்வேறு அம்சங்கள் சேர்ந்து அந்தப்படம் முதலிடத்தில் இருக்கிறது. கதாநாயகர்களின் மதிப்பில் இதுவரை அஜித் முன்னணியில் இருந்தார் இப்போது விஜய் வந்திருக்கிறார்

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 
[X] Close