Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை 28 இரண்டாம் பாகம்...வெங்கட் பிரபு அடுத்த பிளான்?

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் ஜெய், சிவா, பிரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ், நிதின் சத்யா, விஜய் வசந்த் , விஜயலட்சுமி, சம்பத், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் சென்னை 600028. வெங்கட் பிரபு இயக்கிய முதல் படமான இப்படம் உள்ளூர் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இப்படத்தில் நடித்த ஜெய், சிவா, பிரேம் ஜி, விஜய் வசந்த், நிதின் சத்யா, இனிகோ பிரபாகர் என இவர்கள் அடுத்தடுத்து ஹீரோக்களாக வலம் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

சுறுசுறுப்பான திரைக்கதை, இளமையான காமெடி என படத்திற்கு இளைஞர்களின் ஆதரவுகள் குவிந்தன. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கும் திட்டத்தில் வெங்கட் பிரபு இருப்பதாக நெருங்கிய வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் பாகத்தில் நடித்த அதே குழுவிடமே படத்தின் கதையை வெங்கட் பிரபு கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜித், சூர்யா, கார்த்தி என மாஸ் ஹீரோக்களின் கூட்டணிக்குப் பிறகு மீண்டும் பழைய குழுவுடன் வெங்கட் பிரபு இணைய இருக்கிறார். படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜா எனவும் செய்திகள் கசிந்துள்ளன. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close