Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அனிருத் காதலின் இரண்டாம்பாகம்

காதல் என்றாலே ஸ்பெஷல் தான். காதலர்களுக்காக கடந்த இரண்டு வருடங்களாக ஸ்பெஷல் கிஃப்ட் கொடுத்துவரும் அனிருத் இந்த வருடமும் காதலர் தினத்தன்று காதலர்களுக்கு ஆச்சரிய பரிசுடன் காத்திருக்கிறார்.

கடந்த வருட பிப்ரவரி 14ம் தேதி அனிருத் இசையில் வெளியாகி ஹிட் அடித்த பாடல் தான்,

“எனக்கென யாருமில்லையே... உனக்கது தோணவில்லையே
கடல் தாண்டிப் போகும் காதலி.... கை மீறிப் போகுதே என் விதி....


என்ற “எனக்கென” பாடலை இணையத்தில் வெளியிட்டு லவ்வர் பாயாக இளசுகளின் மனதில் வெயிட்டாக இறங்கினார் அனிருத். அதே பாணியில் இப்பாடலின் இரண்டாவது பாகமாக இந்த காதலர் தினத்திற்கும் ஒரு பாடல் ரெடியாகிவிட்டது.

இந்த வருடம் பிப்ரவரி 14ம் தேதி “அவளுக்கென” என்ற சிங்கிள் டிராக் பாடல் வெளியாகவிருக்கிறது. அதற்கான டீஸர் நேற்று வெளியான சில மணிநேரங்களிலேயே செம ரெஸ்பான்ஸ்...

“அவளுக்கென புதிதாய் மாறினோம்.. அவளுக்கென கவிதை உளறினோம்
அவளுக்கென கடல்கள் தாண்டினோம்... அவளுக்கென... அவளுக்கென....”


இவ்விரு பாடல்களையும் அனிருத் இசையமைக்க, “நானும்ரவுடிதான்” பட இயக்குநர் விக்னேஷ் சிவன் தான் பாடல் வரிகளை எழுதியிருக்கிறார் என்பது கூடுதல் செய்தி.

இந்த காதலர் தினத்தன்றும் அனிருத்தின் சிங்கிள் டிராக் ரெடி... ஆனால் இந்த காதலர் தினத்தன்று 15000 ரசிகர்களோடு மலேசியாவில் கொண்டாடவிருக்கிறார் அனிருத் என்பது குறிப்பிடத்தக்கது.  

இரண்டு பாடல்களையும் எழுதிய விக்னேஷ்சிவன் காதலித்துக்கொண்டிருக்கிறார் என்று செய்திகள் வருவதையும், அனிருத் ஏற்கெனவே காதல் தோல்வி அடைந்தவர் என்பதாலும், இப்பாடல்கள் விக்னேஷ்சிவன் தன் காதலியை நினைத்து எழுதினாரா? அல்லது அனிருத், தன் காதலியை நினைத்து இசையமைத்தாரா? என்பதுதான் இணையவாசிகளின் கேள்வியாக இருக்கிறது.

 

அவளுக்கென டீஸருக்கு... http://www.vikatan.com/cinema/video.php?&a_id=7447


 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.