Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இறுதிச்சுற்றுக்கு அடுத்த மாதவன் படம் இதுதான்?

இறுதிச்சுற்று படம் பெரிய வெற்றி. இரண்டு வாரங்களைக் கடந்தும் நல்ல வசூலில் இருக்கிறது என்று சொல்கிறார்கள். இதனால் இந்தப்படத்தை ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனமும் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. அவர்கேளாடு யுடிவியும் சேர்ந்துகொண்டது.

இந்தப்படம் வெற்றி என்றவுடன் மாதவனை வைத்து அடுத்து ஒரு படத்தைத் தயாரிக்கவிருக்கிறதாம் ஒய்நாட் ஸ்டுடியோஸ். ஏற்கெனவே இந்நிறுவனம் தயாரித்த "வ (குவாட்டர் கட்டிங்)"  என்கிற படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி தம்பதியினர்தான் அந்தப்படத்தை இயக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இறுதிச்சுற்று படத்தில் இயக்குநர் சுதாவுக்கு உறுதுணையாக இருந்தாராம் புஷ்கர். அப்போது மாதவனுடனும் நல்ல நட்பு அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அப்போதே மாதவனை வைத்து ஒருபடம் எடுக்கத் திட்டமிட்டதாகவும் அது இப்போது உறுதியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது.

மாதவன் நடிப்பது உறுதி நாயகி மற்ற நடிகர்கள் பற்றிய பேச்சுகள் நடந்துகொண்டிருக்கிறதாம். விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்பு வரலாம்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 
[X] Close