Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்த வருடமும் தல தீபாவளி

அஜீத்தின் அடுத்தபடத்தையும் வீரம், வேதாளம் ஆகிய படங்களை இயக்கிய சிவா இயக்வுது உறுதியாகவிட்டது.

அந்தப்படத்தை சத்யஜோதிபிலிம்ஸ் தயாரிக்கவிருக்கிறது. அந்தப்படம் சம்பந்தப்பட்ட வேலைகள் தொடங்கிவிட்டனவாம். இந்தப்படத்தின் படப்பிடிப்பு மே இறுதி அல்லது ஜூன் முதல்வாரத்தில் தொடங்கவிருப்பதாகச் சொல்கிறார்கள். தொடங்கி முழுமையாக ஐந்து மாதங்கள் முடிவடைகிற நேரத்தில் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

இந்தஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி தீபாவளி வருகிறது. அந்தநாளில் படத்தை வெளியிட்டாகவேண்டும் என்று சொல்லி அதற்கேற்ப படக்குழுவினரைத் தேர்ந்தெடுத்துக்கொண்டிருக்கிறார்களாம். இந்தப்படத்தை ஒப்புக்கொண்டாமல் இடையில் வேறெங்கும் போகாமல் படத்தை முடித்துவிட்டுத்தான் போகவேண்டும் என்று தொழில்நுட்பக்கலைஞர்களிடம் சொல்லிக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

இந்த நான்குமாதங்களுக்குள் யாருடைய தேதிகள் இருக்கின்றனவோ அவர்களே படத்தின் நாயகி மற்றும் சக நடிகர்களாக ஒப்பந்தம் செய்யப்படுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது. 2015 தீபாவளிக்கு வேதாளம் வெளியானது. 2016 தீபாவளியும் தல தீபாவளிதான் என்று சொல்கிறார்கள்.   

 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close