Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஷாருக்கானுக்கு எதிராகப் போராடிய ஏழுபேர்

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் நடித்துவரும் ரேய்ஸ் படத்தின் படப்பிடிப்பு குஜராத் மாநிலம் புஜ் என்ற நகரில் கடந்த சில நாட்களாக நடந்துவருகிறது. படப்பிடிப்பின் போது, ஷாருக்கின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக, “இந்தியாவில் சகிப்பின்மை அதிகரித்து வருவதாக ஷாருக்கான் கூறியது பெரும் சர்ச்சையானது. அதிலிருந்து அவருக்கு இந்து மத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. 

இந்நிலையில், ஷாருக்கான் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டல் முன்பாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சிலர் கல்வீசித் தாக்கியதில், பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த ஷாரூக்கான் கார் சேதமடைந்தது. சம்பவத்தின்போது, ஷாருக்கான் அந்த ஓட்டலில் இல்லை. அவர் பிற்பகலில்தான் ஓட்டலுக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓட்டலின் பாதுகாப்பு அதிகாரி அளித்த புகாரின்பேரில், விசுவ இந்து பரிஷத்தைச் சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த தாக்குதலுக்கு குஜராத் மாநில விசுவ இந்து பரிஷத் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்