Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பொன்ராம் இயக்கத்தில் நடிக்கிறார் லாரன்ஸ்

  கடந்தஆண்டு வெளியான காஞ்சனா2 படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு ராகவாலாரன்ஸ் மொட்டசிவா கெட்டசிவா மற்றும் பைரவா ஆகிய படங்களில் நடிக்கிறார்.

இப்படங்களை முடித்ததும் அடுத்து ஒரு படத்தில் நடிக்க இப்போதே ஒப்புக்கொண்டிருக்கிறாராம். ஐங்கரன்நிறுவனம் தயாரிக்கும் புதியபடமொன்றில் அவர் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

வருத்தப்படாதவாலிபர்சங்கம், ரஜினிமுருகன் ஆகிய படங்களை இயக்கிய பொன்ராம் அந்தப்படத்தை இயக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இருவரும் தனித்தனியே ஐங்கரன் நிறுவனத்தின் படத்தில் பணிபுரிய ஒப்புக்கொண்டிருந்தார்களாம். பொன்ராம் சொன்ன கதை லாரன்ஸ்க்குப் பொருத்தமாக இருக்கும் என்று அவரிடம் சொல்லியிருக்கிறார்கள். அவருக்கும் கதை பிடித்துவிட்டதாம்.

அதோடு பொன்ராம் இயக்கிய இரண்டு படங்களுமே நல்லவெற்றியைப் பெற்றிருக்கின்றன. அவரோடு லாரன்ஸூம் சேர்ந்தால் அந்தப்படத்துக்கு எதிர்பார்ப்பு இருக்கும் என்று விநியோகஸ்தர்களும் சொன்னதாகத் தெரிகிறது. இதனால் பொன்ராம் இயக்கத்தில் நடிக்க லாரன்ஸ் ஒப்புக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.     

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.