Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மீண்டும் இளையராஜா கௌதம்மேனன்

பிப்ரவரி 27 ஆம் தேதி இளையராஜா ஆயிரம் என்ற பெயரில் பெரியஅளவிலான பாராட்டுவிழாவை நடத்த விஜய் தொலைக்காட்சி ஏற்பாடு செய்து வருகிறது. இது தொடர்பாக சில சர்ச்சைகள் இருந்தாலும் அவற்றைத்தாண்டி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்துவருவதாகச் சொல்கிறார்கள்.

இந்நிகழ்ச்சியையொட்டி இளையராஜாவிடம் ஒரு நேர்காணல் எடுக்கப்பட்டிருக்கிறதாம். அந்நேர்காணலை இயக்குநர் கௌதம்மேனன் எடுத்திருக்கிறாராம். சென்னை கிழக்குக்கடற்கரைச்சாலையோரம் அந்நேர்கணால் படமாக்கப்பட்டிருக்கிறது. காலை ஏழு மணிக்குத் தொடங்கிய பேட்டிக்கான படப்பிடிப்பு மாலை ஐந்துமணிவரை நடந்ததாம்.

அதில் இளையராஜாவும் கௌதம்மேனனும் நடந்துகொண்டே பேசுவது போன்ற காட்சிகள் அதிகம் இடம்பெறும் என்கிறார்கள். அந்த நேர்காணலில் இளையராஜா பகிர்ந்துகொண்டிருக்கும் பல்வேறு செய்திகள் புதிதாகவும் சுவையாகவும் அமைந்திருக்கிறதென்கிறார்கள்.

இளையராஜா இசையில் நீதானே என்பொன்வசந்தம் படம் எடுத்த கௌதம்மேனன் அப்போதே அவருக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம் பல விசயங்கள் செய்தார். அதனாலேயே இந்தப் பேட்டியை கௌதம் எடுக்க இளையராஜா ஒப்புக்கொண்டாராம்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..!