Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வித்தியாச படங்களைத் தயாரித்தவரின் புது அவதாரம்

அட்டகத்தி, பீட்சா, சூதுகவ்வும், முண்டாசுபட்டி உள்ளிட்ட வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களைத் தயாரித்தவர் சி.வி.குமார். தன்னுடைய திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் பல புதுமுக இயக்குநர்களை அறிமுகப்படுத்தியவர்.

தற்பொழுது சி.வி.குமார் இயக்குநராக அறிமுகமாகவிருக்கிறார். அவர் இயக்கவிருக்கும் படத்திற்கு மாயவன் என்று பெயரிட்டுள்ளனர். தெலுங்கு நடிகர் சந்திப் கிஷன் நாயகனாகவும், லாவண்யா திரிபாதி நாயகியாகவும் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் டேனியல் பாலாஜி நடிக்க, உடன் பகவதி பெருமாள் (பக்ஸ்), ஜெ பி, மைம் கோபி, பாபு ஆண்டனி ஆகியோர் நடிக்கின்றனர்.

ஜிப்ரான் இசையமைக்கவிருக்கும் இப்படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். மேலும் கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.  சென்னையில் படப்பிடிப்பு தொடங்கி நடந்துவருகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..!