Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராய் லட்சுமி நடிக்கும் ஜூலி 2...ஷாக்கிங் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

அசின், த்ரிஷா, ஷ்ரேயாவை தொடர்ந்து பாலிவுட் பயணமாகிறார் அரண்மனை நடிகை ராய் லட்சுமி. இதற்கு முன் ஓரிரண்டு படங்களில் நடித்தாலும் முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் ராய் லட்சுமிக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

தற்போது 2004ல் வெளிவந்த ஜூலி திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகும் ஜூலி 2 அந்தக் குறையைத் தீர்க்கும் எனத் தெரிகிறது. படத்தில் சோனாக்‌ஷி சின்ஹா இருப்பினும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ராய் லட்சுமி மட்டுமே நிற்கிறார்.

தமிழில் சென்ற வருடம் வந்த அரண்மனை படம் ராய் லட்சுமிக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. தற்போது பாலிவுட்டில் தீபக் ஷிவ்தாசனி இயக்கத்தில் அவர் நடித்து வரும் ஜூலி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சூழ்நிலைகளால் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்ட ஒரு பெண் மீண்டும் ஒரு குடும்ப வாழ்க்கையில் நுழைகையில் என்ன பிரச்சனைகளை எதிர்கொள்கிறாள் என்பதே முதலில் வந்த ஜூலி படத்தின் கதை. 

இரண்டாவது படத்தின் கதையும் ஒரு பெண்ணின் சிக்கலான வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் என்றே தெரிகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ராய் லட்சுமியின் பின்புற டாப்லெஸ் போஸ் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருக்கிறது . ராய் லட்சுமி , சோனாக்‌ஷி சின்ஹா நடிப்பில் உருவாகி வரும் அகிரா படத்திலும் நடித்து வருகிறார்.

-பிரியாவாசு-

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close