Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோஸ்ட் கோபால் வர்மாவின் புதிய கெட்டப் ரகசியங்கள்

சாம் ஆண்டன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் , ஆனந்தி, சரவணன், விடிவி கணேஷ், யோகிபாபு ராஜேந்திரன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’. லைகா தயாரிப்பில் காமெடி படமாக உருவாகி வரும் இப்படம் க்ளைமாக்ஸ் ஷூட்டிங்கை நெருங்கியுள்ளது.

சமீபத்தில் ரஜினியை சந்தித்து ஆசி பெற்றனர் படக்குழுவினர். படத்தின் தலைப்பு ’பாட்ஷா’ படத்தின் ரஜினி பன்ச்சிலிருந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் ரஜினிகாந்த் குழுவினரை வாழ்த்தி , மேலும் டார்லிங் படம் குறித்தும் ரஜினிகாந்த் பாராட்டினார்.

தற்போது படக்குழுவுடன் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் கோஸ்ட் கோபால் வர்மா புது அவதாரம் மகாபலி மகா என ராஜேந்திரனுடன் அலப்பரை போஸ் கொடுத்துள்ளார்.

டார்லிங் படத்தில்  கோஸ்ட் கோபால் வர்மா வேடம் மிகவும் வரவேற்புப் பெற்றது. அதனால், இந்தப்படத்தில் ராஜேந்திரனின் வேடத்தை வடிவமைக்க நிறைய மெனக்கெட்டிருக்கிறார்களாம். அதில் பல ரகசியங்களும் இருக்கின்றனவாம். எனவே அந்த பாணியில் மகாபலி மகா கேரக்டரும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..!