Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சூர்யா படத்தில் என்ன நடக்கிறது?

சூர்யா மூன்று வேடங்களில் நடிக்கும் 24 படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது என்று சொல்லப்பட்டது. படத்தொகுப்பு செய்த நேரத்தில் இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தவேண்டிய தேவை ஏற்பட்டதாம். அதனால் கடந்த சில நாட்களாக அப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

இந்தப்படம் ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல் டீசர் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகும் என்று இணையதளங்களில் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. கடந்த சில நாட்களாகவே அப்படி வந்துகொண்டிருக்கிறது. படத்தின் பெயர் 24 என்பதால் 24 ஆம் தேதி டீசர் வெளியாகிறது என்று சொல்லிவிட்டார்கள் போலும்.

இந்தச்செய்தியை படத்தின் தயாரிப்புப்பொறுப்பில் இருக்கும் ராஜசேகரபாண்டியன் மறுத்திருக்கிறார். 24 ஆம் தேதியன்று படத்தின் டீசர் வெளியாகவிருப்பதாகச் சொல்லப்படுவதில் உண்மையில்லை. படத்தின் டீசர் எப்போது என்பதை விரைவில் அறிவிக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்.

இதனால், ஏற்கெனவே இந்தத் தேதியில் வெளியிடத் திட்டமிட்டு அது நடக்காமல் போய்விட்டதோ என்கிற எண்ணம் வந்திருக்கிறது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close