Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆண்டவன் பார்த்துக்கொள்வான்! போலீஸ் நிலையத்தில் சிம்பு உருக்கம்!

ஆபாச பாடல் விவகாரத்தில் சிம்பு வருகிற 24-ந்தேதிக்குள் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டது.

நேற்று மாலை கோவை வந்த  டி.ராஜேந்தர் இரவு 7 மணியளவில் தனது வழக்கறிஞருடன் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்துக்குச் சென்று, சிம்பு மீதான வழக்கு குறித்து விளக்கம் கேட்டார்.

இந்நிலையில், இன்று காலை சுமார் 10 மணியளவில் கோவை காட்டூர் காவல் நிலையத்தில் நடிகர் சிம்பு ஆஜரானார். அவருடைய வக்கீல்களும் அங்கு சென்றுள்ளனர். சிம்புவிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணைக்கு பின்னர்  வெளியே வந்த சிம்பு, போலிசார் கேட்ட கேள்விகளுக்கு முழுமையாகப் பதில் சொல்லியிருக்கிறேன். என் மேல் எந்தத்தவறும் இல்லை. விசாரணைக்கு முழு ஒத்துழைப்புக் கொடுப்பேன். அதற்கு மேல் ஆண்டவன் பார்த்துக்கொள்வான் என்று கூறினார்.

அவரிடம் சுமார் அரை மணி நேரம் விசாரணை நடந்ததாகத் தெரிகிறது

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close