Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மீண்டும் ஜெயம்ரவி படத்தில் அரவிந்த்சாமி

கடந்தஆண்டு வெளியாகி தனிஒருவன் படம் பெற்ற மிகப்பெரிய வெற்றிக்கு அப்படத்தில் அரவிந்த்சாமியின் வேடமும் ஒரு முக்கிய காரணம். அந்தப்டபம் வெளியான பிறகு அரவிந்த்சாமிக்குக் கிடைத்த வரவேற்பும் மிகப்பெரிது.

அதன்பின், பல்வேறு படங்களில் அவரை நடிக்கக்கேட்டு அணுகிக்கொண்டிருந்தனர். ஆனால் அவர் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை, இப்போது மீண்டும் ஜெயம்ரவி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

ஜெயம்ரவி ஹன்சிகா நடித்த ரோமியோஜூலியட் படத்தை இயக்கிய லட்சுமணன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படத்தில் ஜெயம்ரவி நாயகனாகவும் ஹன்சிகா நாயகியாகவும் நடிக்கவிருக்கிறார்கள்.

இந்தப்படத்தில் முக்கியவேடமொன்றில் அரவிந்த்சாமி நடிக்கவிருக்கிறார். படத்தில் அவர் வில்லனா அல்லது இன்னொரு நாயகனா என்பது தெரியவில்லை. ஆனால் அவர் நடிப்பது உறுதி.

இந்தப்படத்துக்கு போகன் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. மார்ச் 4 ஆம் தேதி முதல் இந்தப்படத்தின் வேலைகள் தொடங்கவிருக்கின்றனவாம்.

போகன் என்பதற்கான விளக்கத்தை இயக்குநர் லட்சுமணனிடம் கேட்டால், இப்போதைக்கு இந்தத்தகவல்கள் போதும் படத்தின் பெயர் பற்றிய விளக்கத்தைப் பிறகு சொல்கிறேன் என்கிறார்.     

 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்